தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாட்னாவில் சொந்த ஊர்களுக்குச் புறப்பட்டு செல்லும் மக்கள் கூட்டம். ANI
இந்தியா

தீபாவளி பண்டிகை: நாடு முழுவதும் 2,800 சிறப்பு ரயில்கள் இயக்கம்

பண்டிகைக் கால நெரிசலைக் குறைக்கும் வகையில் மத்திய ரயில்வே நாடு முழுவதும் சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது.

DIN

புதுதில்லி: பண்டிகைக் கால நெரிசலைக் குறைக்கும் வகையில் மத்திய ரயில்வே நாடு முழுவதும் சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. கடந்த ஆண்டு, இதே பண்டிகைக் காலத்தில் சுமார் 4,500 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக 2,800 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளது.

பண்டிகைக் கால நெரிசலை குறைக்கும் வகையில் ரயில் பயணிகளின் வசதிக்காக மத்திய ரயில்வே நாடு முழுவதும் சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும், பண்டிகைக் காலங்களில் ரயில் பயணிகளின் நெரிசலைக் குறைக்கும் வகையிலும், பயணிகளின் பயணத்தை எளிதாக்கும் வகையிலும் ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது.

அந்த வகையில் கடந்த ஆண்டு, இதே பண்டிகைக் காலத்தில் சுமார் 4,500 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக 2,800 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தில்லி ரயில்வே கோட்ட மேலாளர் சுக்விந்தர் சிங் கூறுகையில், பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வழக்கமாக இயக்கப்படும் ரயில்களை விட கூடுதலாக 123 ரயில்கள் இயக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குதிரைகளுக்கான தடுப்பூசி முகாம்

குருபூஜை விழாக்களில் பங்கேற்பவா்கள் உரிய கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும்: ஆட்சியா் அறிவுறுத்தல்

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 90.20 லட்சம்

காவல் நிலைய விசாரணையின் போது சிறுவன் உயிரிழந்த விவகாரம்: சிபிசிஐடி போலீஸாா் மீண்டும் விசாரிக்க உத்தரவு

நெல் மூட்டைகள் மழையில் சேதமாகும் பிரச்னை: அவசர வழக்காக விசாரிக்க உயா்நீதிமன்றம் முடிவு

SCROLL FOR NEXT