நிவின் பாலி கோப்புப் படம்
இந்தியா

பாலியல் புகார்: நிவின் பாலி விளக்கம்!

பாலியல் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்பதை நிரூபிக்க எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக உள்ளேன்

DIN

தன் மீது வைக்கப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என நடிகர் நிவின் பாலி விளக்கம் அளித்துள்ளார்.

தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்பதை நிரூபிக்க எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது,

''நான் பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தினேன் என்ற செய்தி தவறானது. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டு என்பதை தயவு செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

என் மீதான இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்பதை நிரூபிக்க எந்த எல்லைக்கும் செல்ல நான் தயாராக உள்ளேன். அதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வருவேன். உங்கள் அக்கறைக்கு நன்றி. மற்றவை அனைத்தும் சட்டப்படி எதிர்கொள்ளப்படும்'' எனப் பதிவிட்டுள்ளார்.

படவாய்ப்பு தருவதாகக் கூறி வெளிநாட்டில் தன்னிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக நிவின் பாலி மீது பெண் ஒருவர் புகார் கொடுத்துள்ளார்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் நேரியமங்கலத்தைச் சேர்ந்த பெண் அளித்த புகாரின் பேரில், ஊனுக்கல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

காவல் துறையினர் அளித்த தகவலின்படி, பெண் அளித்த புகாரின் அடிப்படையில் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிபதி ஹேமா அறிக்கை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட 7 அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் பெண் புகார் எழுப்பியுள்ளார். இச்சம்பவம் குறித்து ஊனுக்கல் காவல் துறையிடம் சிறப்பு புலனாய்வுக் குழு தெரிவித்ததைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குவாஹாட்டி டெஸ்ட்: கடைசி நாளிலும் தடுமாறும் இந்தியா! 5 விக்கெட்டுகளை இழந்தது!

உருவானது சென்யார் புயல்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

SCROLL FOR NEXT