மோடி மீது வெறுப்புணர்வு..? -வெளிப்படையாக பதில் அளித்த ராகுல்
ராகுல் காந்தி இந்தியாவுக்கு எதிரான கருத்து தெரிவித்திருப்பதாக பாஜக கண்டனம்
அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, அங்கு பல தரப்பு மக்களுடன் கலந்துரையாடி வருகிறார். இந்த நிலையில், அமெரிக்க சுற்று பயணத்தின்போது ராகுல் காந்தி இந்தியாவுக்கு எதிரான கருத்து தெரிவித்திருப்பதாக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மீது வெறுப்புணர்வு இருக்கிறதா? என்ற கேள்விக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து ஜார்ஜ்டவுண் பல்கலைக்கழகத்தில் ராகுல் காந்தி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, “நான் மோடியை வெறுக்கவில்லை. அவருக்கென ஒரு கண்ணோட்டம் உள்ளது. அவருடைய கருத்தில் நான் உடன்படவில்லை. ஆனால், நான் அவரை வெறுக்கவில்லை. அவருக்கென வேறுபட்டதொரு கண்ணோட்டம் உள்ளது, எனக்கென ஒரு மாறுபட்ட கண்ணோட்டம் உள்ளது” என்று கூறியுள்ளார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.