மோடி - அமித் ஷா கோப்புப் படம்
இந்தியா

விவசாயிகள் நலனுக்காக மோடி: அமித் ஷா

விவசாயிகளின் நலன்களுக்கு முக்கியத்துவம் அளித்து வரும் மோடி அரசு 3 முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது

DIN

விவசாயிகளின் நலன்களுக்கு பிரதமர் மோடி தலைமையிலான அரசு முக்கியத்துவம் அளிப்பதாக மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் பக்கத்தில், விவசாயிகளின் பயிர்களுக்கு நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்வதற்காக, ஏற்றுமதியை மோடி அரசு அதிகரித்து வருகிறது. மேலும், விவசாயிகளின் நலன்களுக்கு முக்கியத்துவம் அளித்து வரும் மோடி அரசு மூன்று முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.

முதலாவதாக, வெங்காயத்திற்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை நீக்கவும், ஏற்றுமதி வரியை 40 சதவிகிதத்திலிருந்து 20 சதவிகிதமாகக் குறைக்கவும், மோடி அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம், வெங்காய ஏற்றுமதி அதிகரிக்கும், தொடர்ந்து வெங்காய உற்பத்தி செய்யும் விவசாயிகளின் வருமானமும் அதிகரிக்கும்.

இரண்டாவதாக, பாஸ்மதி அரிசி மீதான குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை ரத்து செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது; இதன்மூலம், பாஸ்மதி அரிசியை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு, அதை ஏற்றுமதி செய்வதன் மூலம் அதிக லாபம் ஈட்ட உதவும்.

மூன்றாவதாக, பாமாயில், சோயா, சூரியகாந்தி எண்ணெய் முதலானவை மீதான இறக்குமதி வரியை 12.5 சதவிகிதத்திலிருந்து 32.5 சதவிகிதமாகவும், அவற்றின் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்க மீதான வரியை 13.75 சதவிகிதத்திலிருந்து 35.75 சதவிகிதமாகவும் உயர்த்தவும், மோடி அரசு முடிவு செய்துள்ளது.

இதன்மூலம், சோயாபீன் விவசாயிகள் தங்கள் பயிர்களுக்கு சிறந்த விலையைப் பெறவும், அவர்களின் வருமானத்தை அதிகரிக்கவும் உதவும் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆட்டோ கவிழ்ந்து சிறுவன் உயிரிழப்பு

பேச்சு தோல்வி: 6-ஆவது நாளாக நீடித்த தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: சென்னை உயா்நீதிமன்ற உத்தரவு ரத்து

வால்பாறையில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் உண்ணாவிரதம்

பிகாரை சோ்ந்தவா்களுக்கு தமிழகத்தில் வாக்குரிமை இருப்பதில் தவறில்லை: டி.டி.வி.தினகரன்

SCROLL FOR NEXT