உலக மக்கள்தொகை தினத்தையொட்டி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அதிகாரிகளுடன் காணொலி வாயிலான ஆலோசனை கூட்ட நிகழ்வில் பங்கேற்ற மத்திய சுதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா. உடன் அத் துறையின் இணையமைச்சா் அனுப்பிரியா படேல். கோப்புப் படம்
இந்தியா

விரைவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு?

நாடு முழுவதும் விரைவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Din

நாடு முழுவதும் விரைவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 1981-ஆம் ஆண்டுமுதல் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு மேற்கொண்டு வந்தது. கடந்த 2020-ஆம் ஆண்டு ஏப்.1-ஆம் தேதி மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டத்தை தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால் கரோனா பரவல் காரணமாக அந்தப் பணியை மத்திய அரசு ஒத்திவைத்தது.

மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த புதிய தரவுகள் இல்லாததால், 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், அரசு துறைகள் கொள்கைகளை வகுத்து மானியங்களை ஒதுக்கீடு செய்து வருகின்றன.

இந்நிலையில் மத்திய அரசு அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘நாடு முழுவதும் விரைவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது. ஆனால் இந்தக் கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக ஜாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்வது குறித்து முடிவு எடுக்கப்படவில்லை’ என்றாா்.

ஜாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

ஜம்மு ரயில் நிலையத்தை தகர்க்க புறா மூலம் வெடிகுண்டு மிரட்டல்?

பழமொழி மருத்துவம்

பேரறிஞர் அண்ணா (வாழ்க்கை வரலாறு)

தமிழர் பண்பாடு மறைவனவும் மீள்வனவும்

பாலியல் வசீகரமும், வக்கிரமும்!

SCROLL FOR NEXT