இந்தியா

ஹரியாணா தேர்தல் களத்தில் 1,031 வேட்பாளர்கள்!

ஹரியாணா சட்டப் பேரவை தேர்தல் களத்தில் மொத்தம் 1,031 வேட்பாளர்கள் உள்ளனர்.

Venkatesan

சண்டீகர்: ஹரியாணா சட்டப் பேரவை தேர்தல் களத்தில் மொத்தம் 1,031 வேட்பாளர்கள் உள்ளனர்.

பாஜக ஆளும் ஹரியாணாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக அக்டோபர் 5-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் போட்டியிட பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஜனநாயக ஜனதா கட்சி, இந்திய தேசிய லோக் தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சைகள் உள்பட மொத்தம் 1,559 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அவை பரீசிலிக்கப்பட்டு 1,221 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன.

வேட்பு மனுக்களை திரும்பப் பெற திங்கள்கிழமை கடைசி நாள் என்ற நிலையில், 190 பேர் தங்களின் மனுக்களை திரும்பப் பெற்றனர்.

இதையடுத்து, 1,031 வேட்பாளர்களுடன் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. அக்டோபர் 8-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT