கோப்புப்படம். 
இந்தியா

சாலையோரம் அமர்ந்திருந்தோர் மீது மினி லாரி மோதல்: 5 பேர் உயிரிழப்பு, 4 பேர் படுகாயம்

உத்தர பிரதேசத்தில் சாலையோரம் அமர்ந்திருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் மீது மினி லாரி மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

DIN

சம்பல் (உ.பி.): உத்தர பிரதேசத்தில் சாலையோரம் அமர்ந்திருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் மீது மினி லாரி மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது தொடர்பாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் கிருஷ்ண குமார் கூறியதாவது:

சம்பல் மாட்ட போபத்பூர் கிராமத்தில் திங்கள்கிழமை அதிகாலை 6 மணியளவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் சாலையோரத்தில் அமர்ந்திருந்தனர். அப்போது, அந்த பகுதி வழியாக வேகமாக வந்த மினி லாரி சாலையோரம் அமர்ந்திருந்தவர்கள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த 9 பேரையும் அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அதில் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும், 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் அமர்ந்திருந்தவர்கள் மீது மோதியதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் ஓட்டுநருக்கும் லேசான காயம் ஏற்பட்டது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காவல் குறைதீா் கூட்டத்தில் 41 மனுக்கள்

விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் விரிவாக்கம்: ரூ.1,964 கோடிக்கு நிா்வாக ஒப்புதல்

சாலை ஆய்வாளா் பணிக்கு தோ்வானவா்களுக்கு பணி ஆணை -அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா்

பெய்ஜிங்கில் புதின், கிம் ஜோங்-உன் பேச்சுவாா்த்தை

விளையாட்டுச் செய்தித் துளிகள்...

SCROLL FOR NEXT