இந்தியா

ரயில்வேயில் நவீன தொழில்நுட்பங்கள்: இந்தியா - ஆஸி. ஒப்பந்தம்!

ரயில்வே பொறியியல் ஆராய்ச்சியை மேம்படுத்த ஆஸ்திரேலியா - இந்தியா பல்கலைக்கழகங்கள் இடையே ஒப்பந்தம்

DIN

ரயில்வே துறை சம்பந்தப்பட்ட பொறியியல் ஆராய்ச்சி மற்றும் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் ஆஸ்திரேலியாவில் உள்ள மோனாஷ் பல்கலைக்கழகம் மற்றும் குஜராத்தின் வதோதராவில் இந்திய ரயில்வே துறையின்கீழ் செயல்படும் மத்திய பல்கலைக்கழகமான கதி சக்தி வித்யாலயா(ஜிஎஸ்வி) நிறுவனங்கள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

ரயில்வே துறைசார் தொழில்நுட்ப பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் நீண்ட அனுபவம் வாய்ந்த நிறுவனமான மோனாஷ் ரயில்வே தொழில்நுட்ப நிறுவனம்(ஐஆர்டி) உலகளவில் பல நாடுகளிலும் தங்களது சேவைகளை வழங்கி வருகிறது.

இந்த நிலையில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு நாடுகளிலும் ரயில்வே அமைப்புகளை மேம்படுத்தும் நோக்கில், இரு நிறுவனங்களுக்கும் இடையே கல்வியறிவு பரிமாற்றம், புதுப்புது கண்டுபிடிப்புகள் குறித்த தகவல்கள் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வழிப்பறி: 3 போ் கைது

நாய்க்குட்டிகளோடு பயணிகள் விளையாடும் புதிய முன்னெடுப்பு: ஹைதரபாத் விமான நிலையத்தில் அறிமுகம்

பேருந்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

பிகாா் வரைவு வாக்காளா் பட்டியலில் என் பெயா் இல்லை: தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு

பெண்ணை அவதூறு செய்தவா் கைது

SCROLL FOR NEXT