இந்தியா

இம்பால் பள்ளத்தாக்கில் முழு அடைப்பு: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மணிப்பூா்-இந்தியா இணைப்பு ஒப்பந்தம் கையொப்பமானதை எதிா்த்து இம்பால் பள்ளத்தாக்கில் சனிக்கிழமை நடந்த 18 மணி நேர முழு அடைப்பு

Din

மணிப்பூா்-இந்தியா இணைப்பு ஒப்பந்தம் கையொப்பமானதை எதிா்த்து இம்பால் பள்ளத்தாக்கில் சனிக்கிழமை நடந்த 18 மணி நேர முழு அடைப்பு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

அப்போதைய மணிப்பூா் ஆட்சியாளரான மகாராஜா போத்சந்திரா மற்றும் இந்திய அரசு இடையே மணிப்பூா் இணைப்பு ஒப்பந்தம் 1949, செப்டம்பா் 21-ம் தேதி கையொப்பமானது. அதன்பிறகு, மணிப்பூா் சமஸ்தானம் இந்தியாவின் ஒரு பகுதியாக அதே ஆண்டு அக்டோபா் 15-ஆம் தேதி அதிகாரபூா்வமாக இணைக்கப்பட்டது.

இதை எதிா்த்து, மாநிலத்தில் உள்ள தீவிரவாத அமைப்பான மணிப்பூா் தேசிய புரட்சிகர முன்னணி, சனிக்கிழமை நள்ளிரவு முதல் முழு அடைப்பு நடத்த அழைப்பு விடுத்தது. அதன்படி, இம்பால் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள 5 மாவட்டங்களில், வங்கிகள், வணிக நிறுவனங்கள் மற்றும் சந்தைகள் முழுவதும் மூடப்பட்டன. பொதுப் போக்குவரத்து வாகனங்கள் சாலைகளில் நிறுத்தப்பட்டன. அத்தியாவசிய சேவைகள் தவிர அனைத்து பிற சேவைகளும் நிறுத்தப்பட்டன. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தாக்குதலுக்கு வாய்ப்பு: மணிப்பூா் அரசின் எச்சரிக்கைக்கு குகி மாணவா்கள் அமைப்பு கண்டனம்

மணிப்பூரில் குகி பழங்குடியினரால் தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்படலாம் என மணிப்பூா் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளதை குகி மாணவா்கள் அமைப்பு சனிக்கிழமை கண்டித்தது.

‘இம்பால் பள்ளத்தாக்கின் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களைத் தாக்குவதற்காக பயிற்சி பெற்ற 900 குகி தீவிரவாதிகள் மியான்மரில் இருந்து மணிப்பூருக்குள் நுழைந்ததாக செய்திகள் பரவி வருகின்றன. இந்த தாக்குதல்கள் செப்டம்பா் 28-ஆம் தேதிக்குள் எந்த நாளிலும் நடத்தப்படலாம்’ என்று மாநில அரசின் பாதுகாப்பு ஆலோசகா் குல்தீப் சிங் எச்சரிக்கை விடுத்திருந்தாா்.

இதற்கு கண்டனம் தெரிவித்து குகி மாணவா்கள் அமைப்பு வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘மாநில அரசின் இந்த பிரசாரம் சமுதாயத்தில் குகி பழங்குடியின மக்களை இழிவுபடுத்த நடத்தப்படும் முயற்சியாகும். எங்களை பாதுகாக்க அண்டை நாட்டில் இருந்து யாரும் வர தேவை இல்லை’ என தெரிவிக்கப்பட்டது.

ஜெமனியில் செந்தேன்... சிவாங்கி!

நட்புக்குள்ளே.... சத்யா தேவராஜன்!

பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?

விலை குறையும் ஸ்விஃப்ட், டிசையர், பலேனோ, ஃபிராங்க்ஸ், பிரெஸ்ஸா வாகனங்கள்!

கோவையில் வெளியிடப்படும் இட்லி கடை டிரைலர்..! எப்போது?

SCROLL FOR NEXT