கார்கே 
இந்தியா

கார்கேவின் ஹரியாணா தேர்தல் பிரசாரம் ரத்து!

கடந்த 10 ஆண்டுகளாக மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் பாஜகவிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றக் காங்கிரஸ் முயற்சிக்கிறது

பிடிஐ

ஹரியாணாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று மேற்கொள்ளவிருந்த தேர்தல் பிரசாரங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மாநிலத்தின் அம்பாலா நகரிலும், கர்னால் மாவட்டத்தின் கராண்டாவிலும் இரண்டு தேர்தல் பேரணிகளில் கார்கே பங்கேற்று உரையாற்றவிருந்தார்.

இதையடுத்து, அவர் உடல்நிலைக் கருதி ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தப்பட்டதைத் தொடர்ந்து இன்று நடைபெறவிருந்த பேரணியில் கார்கே பங்கேற்கவில்லை என்று கட்சியின் தலைவர் ஒருவர் அறிக்கையில் தெரிவித்தார்.

90 உறுப்பினர்களைக் கொண்ட ஹரியாணா சட்டப்பேரவைக்கு அக்டோபர் 5-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அக்டோபர் 8-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

இந்த தேர்தலில் போட்டியிட பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஜனநாயக ஜனதா கட்சி, இந்திய தேசிய லோக் தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் போட்டியிட களமிறங்கியுள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளாக மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் பாஜகவிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றக் காங்கிரஸ் முயற்சிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரவில் 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

140 ஆண்டுகளுக்கு முன் மாயமான பேய்க் கப்பல் கண்டுபிடிப்பு!

அட்லாண்டிக் கடலில் புயலைக் காணோம்! ஆய்வாளர்கள் அதிர்ச்சி!

நடுவரை நீக்கும் கோரிக்கையை மீண்டும் நிராகரித்த ஐசிசி; ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் தொடருமா?

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

SCROLL FOR NEXT