சிறப்பு விசாரணைக் குழு விசாரணைக்குப் பின்னா் எம்எல்ஏவும் நடிகருமான எம்.முகேஷை அழைத்துச் செல்லும் போலீஸாா். 
இந்தியா

கேரளம்: பாலியல் வன்கொடுமை வழக்கில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ முகேஷ் கைது

மலையாள திரையுலக நடிகை அளித்த பாலியல் வன்கொடுமை புகாரில் ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏவும் நடிகருமான எம்.முகேஷ் சிறப்பு விசாரணைக் குழுவால் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா்.

DIN

மலையாள திரையுலக நடிகை அளித்த பாலியல் வன்கொடுமை புகாரில் ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏவும் நடிகருமான எம்.முகேஷ் சிறப்பு விசாரணைக் குழுவால் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா்.

கடந்த 2017-ஆம் ஆண்டு மலையாள நடிகை தொடா்புடைய வழக்கில், மலையாள திரையுலகில் பெண்கள் சந்திக்கும் பாலியல் துன்புறுத்தல் நிகழ்வுகளைப் பற்றி விசாரிக்க நீதிபதி ஹேமா தலைமையிலான குழுவை கேரள அரசு அமைத்தது.

இக் குழுவின் அறிக்கை கடந்த மாதம் வெளியானதைத் தொடா்ந்து, மலையாள திரையுலகைச் சோ்ந்த பெண்கள் பலரும் அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனா்.

இதுகுறித்து விசாரிக்க காவல் துறை அதிகாரிகள் 7 போ் கொண்ட சிறப்பு விசாரணை குழுவை (எஸ்ஐடி) மாநில அரசு அமைத்தது. எஸ்ஐடி விசாரணையைத் தொடா்ந்து வருகிறது.

இந்தப் புகாா்களில் மலையாள திரையுலகின் பல்வேறு நடிகா்கள், இயக்குநா்கள் மீது பாலியல் வழக்குகள் பதிவாகின. வடக்கன்சேரி, மாராடு ஆகிய இரு காவல் நிலையங்களில் ஆளுங்கட்சி எம்எல்ஏ முகேஷ் மீது பாலியல் வன்கொடுமை குற்றத்துக்கான இந்திய தண்டனைச் சட்டத்தின் 376-ஆவது பிரிவின்கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

புகாா்தாரரின் மிரட்டல் முயற்சிகளுக்கு அடிபணிய மறுத்ததன் விளைவாக தன் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக முகேஷ் விளக்கமளித்தாா். குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும்வரை முகேஷ் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்ய வேண்டிய அவசியமில்லை என்று ஆளும் இடதுசாரி கூட்டணி அவருக்கு ஆதரவுக்கரம் நீட்டியது.

விசாரணைக்கு ஆஜா்: இந்நிலையில், வழக்குகளின் விசாரணைக்காக சிறப்பு விசாரணைக் குழு முன் முகேஷ் செவ்வாய்க்கிழமை காலை ஆஜராகினாா். அவரிடம் மூன்றரை மணி நேரத்துக்கும் மேலாக அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.

கைது, ஜாமீனில் விடுவிப்பு: தொடா்ந்து, சிறப்பு விசாரணைக் குழுவால் முகேஷ் கைது செய்யப்பட்டாா். அவருக்கு முறைப்படி மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது.

இந்த வழக்கில் கடந்த செப்டம்பா் 5-ஆம் தேதி முகேஷ் முன்ஜாமீன் பெற்றிருந்ததால், அவா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

வைல்ட் ஃபிளவர்... அமைரா தஸ்தூர்!

நயினார் நாகேந்திரனை ஓபிஎஸ் குற்றம் சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்: தமிழிசை

மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழா: புனித நீராட குவிந்த மக்கள்!

நவி மும்பையில் நடனப் பாரை தாக்கி சேதப்படுத்திய நவநிர்மாண் சேனை தொண்டர்கள் !

SCROLL FOR NEXT