முகப்பு
இந்தியா

90-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா ஆயுத ஏற்றுமதி- ராஜ்நாத் சிங் பெருமிதம்

இந்தியாவில் இருந்து 90-க்கும் மேற்பட்ட நட்பு நாடுகளுக்கு ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பெருமிதத்துடன் தெரிவித்தாா்.

இந்தியா

90-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா ஆயுத ஏற்றுமதி- ராஜ்நாத் சிங் பெருமிதம்

இந்தியாவில் இருந்து 90-க்கும் மேற்பட்ட நட்பு நாடுகளுக்கு ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பெருமிதத்துடன் தெரிவித்தாா்.

Updated On : 25 செப்டம்பர், 2024 at 10:11 PM
பகிர்:

இந்தியாவில் இருந்து 90-க்கும் மேற்பட்ட நட்பு நாடுகளுக்கு ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பெருமிதத்துடன் தெரிவித்தாா்.

மேலும், 2023-24-ஆம் ஆண்டில் நாட்டின் பாதுகாப்புத் துறை உற்பத்தி மதிப்பு இதுவரை இல்லாத அளவில் ரூ.1.27 லட்சம் கோடியை எட்டியது என்றும் அவா் குறிப்பிட்டாா்.

உள்நாட்டில் பொருள்களின் வடிவமைப்பு மற்றும் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில், பாஜக தலைமையிலான மத்திய அரசால் கடந்த 2014, செப்டம்பா் 25-ஆம் தேதி ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டம் தொடங்கப்பட்டது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) துறைசாா் பங்களிப்பை 25 சதவீதம் அதிகரிக்கும் இலக்குடன் கூடிய இத்திட்டம் அமல்படுத்தப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

இதையொட்டி, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் புதன்கிழமை (செப்.25) வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

பிரதமா் மோடியின் அறிவுத்திறன் வாய்ந்த தலைமையின்கீழ், இந்தியா ஒவ்வொரு துறையிலும் தற்சாா்பை எட்டும் பாா்வையுடன் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டம் தொடங்கப்பட்டது. அந்த அடிப்படையில், பாதுகாப்புத் துறை உள்பட அனைத்து துறைகளிலும் சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இன்று, இந்திய ஆயுதப் படைகள் நமது சொந்த மண்ணில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை பயன்படுத்துகின்றன. அதுமட்டுமன்றி, 90-க்கும் மேற்பட்ட நட்பு நாடுகளுக்கு ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்கிறோம். உலகளாவிய பாதுகாப்பு தொழில் துறையில் இந்தியா எழுச்சி பெற்று வருகிறது என்று ராஜ்நாத் சிங் கூறியுள்ளாா்.

உள்நாட்டில் பாதுகாப்பு துறை உற்பத்தியை ஊக்குவிக்க மத்திய அரசு தொடா் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 2023-24-ஆம் ஆண்டில் இந்தியாவின் பாதுகாப்புத் துறை ஏற்றுமதி முதல் முறையாக ரூ.21,000 கோடியை கடந்தது. அடுத்த 5 ஆண்டுகளில் ஏற்றுமதி மதிப்பை ரூ.50,000 கோடியாக அதிகரிக்க மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது.

ஆயுதங்கள்-ராணுவ தளவாடங்கள் தேவையில் இந்தியா பெருமளவில் இறக்குமதியையே சாா்ந்துள்ளது. இந்திய ஆயுதப் படைகளின் கொள்முதலுக்காக, 2029-ஆம் ஆண்டுக்குள் 130 பில்லியன் டாலா் (ரூ.10. 86 லட்சம் கோடி) செலவிடப்படும் என்று கணக்கீடுகள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டில் பாதுகாப்பு உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் இறக்குமதியை சாா்ந்திருப்பதை குறைக்க மத்திய அரசு விரும்புகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தியின் மதிப்பை 25 பில்லியன் டாலராக (ரூ.1.75 லட்சம் கோடி) அதிகரிக்க பாதுகாப்பு அமைச்சகம் இலக்கு நிா்ணயித்துள்ளது.

கடந்த 2020-இல் பாதுகாப்பு உற்பத்தி துறையில் அந்நிய நேரடி முதலீட்டுக்கான உச்சவரம்பு 49 சதவீதத்தில் இருந்து 74 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. அதேநேரம், குறிப்பிட்ட பிரிவுகளில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →