பாலியல் வழக்கில் முன்ஜாமீன் கோரி நடிகர் சித்திக் மேல்முறையீடு
பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு
நடிகர் சித்திக் தனக்கெதிரான பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.
நடிகைக்கு பாலியல் வன்கொடுமை அளித்த வழக்கில் மலையாள நடிகா் சித்திக்கு முன்ஜாமீன் அளிக்க கேரள உயா்நீதிமன்றம் மறுத்து, அவரது மனுவை செவ்வாய்க்கிழமை(செப்.24) தள்ளுபடி செய்தது. இதையடுத்து, தலைமறைவாக உள்ள சித்திக் முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வாா் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று(செப்.25) உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.