முகப்பு
இந்தியா

பிரபல யூ-டியூபர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு!

ஆந்திரத்தில் பிரபல யூ-டியூபரான ஹர்ஷா சாய் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On : 25 செப்டம்பர் 2024, 12:37 pm IST
ஹர்ஷா சாய் - படம் | இன்ஸ்டா
பகிர்:

ஆந்திரத்தில் பிரபல யூ-டியூபரான ஹர்ஷா சாய் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆந்திரம், தெலங்கானா மட்டுமின்றி தமிழகத்திலும் புகழ்பெற்ற யூடியூபர் ஹர்ஷா சாய். ஹர்ஷா சாய் ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்வது போல விடியோக்கள் வெளியிட்டு பிரபலமானவர். இவருக்கு தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளிலும் யூடியூப் சேனல்கள் உள்ளன. தமிழ் யூடியூப் சேனலில் மட்டும் 85 லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்கிரைப்பர்கள் உள்ளனர். இன்ஸ்டாகிராமில் இவருக்கு 1 கோடியே 40 லட்சத்துக்கும் அதிகமான பின் தொடர்பவர்களும் உள்ளனர்.

ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் பைக்! விரைவில் அறிமுகம்...

இந்த நிலையில், ஆந்திர மாநிலம் ஹைதராபாத் நார்சிங்கி காவல் நிலையத்தில் பெண் நடிகை ஒருவர், ஹர்ஷா சாய் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறி புகார் அளித்துள்ளார்.

Advertisement

Advertisement

அந்தப் புகாரில் 25 வயதான நடிகையை யூ-டியூபர் ஹர்ஷா சாய், பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் பின்னர் அந்தப் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்கள், விடியோக்களை வைத்து மிரட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகாரளித்தப் பெண் மும்பையில் வசித்து வருகிறார். இவர் பிக்பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். இவர் கடந்த வருடம் யூ-டியூபரான ஹர்ஷா சாயுடன் இணைந்து ஒரு படத்திலும் நடித்துள்ளார். பெண் நடிகைக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடைபெற்றதாகவும், இன்னும் ஹர்ஷா சாய் கைது செய்யப்படவில்லை என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை அருகே காரிலிருந்து ஐந்து உடல்கள் மீட்பு: தற்கொலையா?

இதுகுறித்து அந்தப் பெண் நடிகை கூறுகையில், “இருவரும் நண்பர்கள் நடத்திய ஒரு நிகழ்ச்சியில் முதல் முறையாக சந்தித்து காதலித்து வந்துள்ளனர். மேலும், அந்த நடிகையை திருமணம் செய்வதாகக்கூறி ஹர்ஷா சாய் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் அவரது நிர்வாணப் புகைப்படங்களை வைத்து மிரட்டி அவரிடம் இருந்து ரூ.2 கோடி கேட்டு மிரட்டியதாகவும்” தெரிவித்துள்ளார்.

ஹர்ஷா சாய் மீது பாலியல் வன்கொடுமை, பெண்களை நிர்வாணமாக புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் எடுத்து மிரட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் காலாண்டு விடுமுறை நீட்டிப்பு! மாணவர்களுக்கு மகிழ்ச்சி!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments