அமித் ஷா 
இந்தியா

ஜம்மு-காஷ்மீரை பயங்கரவாதம், ஊழலில் இருந்து விடுவிக்க வாக்களியுங்கள்: அமித் ஷா!

ஜம்மு-காஷ்மீரை பயங்கரவாதம், ஊழலில் இருந்து விடுவிக்க வாக்களியுங்கள் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.

DIN

ஜம்மு-காஷ்மீரை பயங்கரவாதம், ஊழலில் இருந்து விடுவிக்க வாக்களியுங்கள் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.

பேரவைத் தேர்தல்

ஜம்மு - காஷ்மீரில் இரண்டாம் கட்டமாக 26 பேரவைத் தொகுதிகளுக்கு புதன்கிழமை (செப்.25) தோ்தல் நடைபெற்றுவருகிறது. இதில் 239 வேட்பாளா்கள் போட்டியிட்ட நிலையில் 25 லட்சத்துக்கும் மேற்பட்டோா் வாக்களிக்க இருக்கின்றனா்.

ஜம்மு-காஷ்மீரில் இரண்டாம் கட்டத் தோ்தல்: வாக்குப்பதிவு விறுவிறுப்பு

அமித் ஷா எக்ஸ் தளப் பதிவு

ஜம்மு-காஷ்மீர் பேரவைத் தேர்தல் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “ஜம்மு-காஷ்மீரின் 2-ஆம் கட்ட தேர்தலில் வாக்களிக்கவுள்ள அனைத்து வாக்காளர்களும் பயங்கரவாதம் இல்லாத மற்றும் வளர்ச்சியடைந்த ஜம்மு-காஷ்மீரை உருவாக்க அதிகளவில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களின் பொன்னான எதிர்காலத்திற்காகவும், தாழ்த்தப்பட்டோர், பெண்களின் உரிமைகளுக்காகவும், ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிக்காகவும் அர்ப்பணிப்புடன் செயல்படும் அரசுக்கு வாக்குகளை செலுத்துங்கள்.

ஜனநாயகத்தை வலுப்படுத்தவும், ஜம்மு-காஷ்மீரை பயங்கரவாதம், வாரிசு அரசியல், ஊழலில் இருந்து விடுவிக்கவும் இன்றே வாக்களியுங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.

பத்லாபூர் சம்பவம்: குற்றவாளியின் தலையில் பாய்ந்த துப்பாக்கித் தோட்டா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அழகாக உணர்கிறேன்... பாத்திமா சனா ஷேக்!

வழக்கமான லுக் இல்லைதான்... வினுஷா தேவி!

நவரத்னா அந்தஸ்தை பெற்ற நுமாலிகர் ரிஃபைனரி!

எந்தெந்த மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

உன் காதலில் நான் வாழ்ந்தேன்... க்ரித்தி சனோன்!

SCROLL FOR NEXT