அரவிந்த் கேஜரிவால் 
இந்தியா

சாலைகள் சீரமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் தொடங்கப்படும்: கேஜரிவால்

சாலைகளை சீரமைக்கும் பணி வரும் மாதங்களில் போர்க்கால அடிப்படையில் தொடங்கப்படும்.

பிடிஐ

தலைநகர் தில்லியில் சேதமடைந்த அனைத்து சாலைகளையும் சீரமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் தொடங்கப்படும் என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார்.

வடக்குப் பகுதியில் உள் ரோஷனாரா சாலையில் தில்லி முதல்வர் அதிஷியுடன் ஆம் ஆத்மி தலைவர் கேஜரிவால் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

இதையும் படிக்க: வரம் தரும் வாரம்!

கடந்த ஏழு முதல் எட்டு மாதங்களாக சாலைகள் சேதமடைந்துள்ளதாக அப்பகுதியில் உள்ள மக்கள் கூறியுள்ளனர். தில்லியில் உள்ள அனைத்து சாலைகளின் நிலையை மதிப்பீடு செய்ய முதல்வர் அதிஷியை நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.

எல்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் சாலைகளின் நிலையை மதிப்பீடு செய்ய வேண்டும். தில்லியில் வசிக்கும் மக்களுக்கு எந்தவித சிரமமும் அடையாத வகையில, சேதமடைந்த அனைத்து சாலைகளையும் சீரமைக்கும் பணி வரும் மாதங்களில் போர்க்கால அடிப்படையில் தொடங்கப்படும்.

நான் திரும்பி வந்துவிட்டேன். தடைப்பட்ட பணிகள் அனைத்தும் மீண்டும் தொடங்கப்படும் என்பதை மக்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன் என்று கேஜரிவால் கூறினார்.

கேஜரிவால் கலால் கொள்கை வழக்கில் ஐந்து மாதங்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தால் ஜாமீன் வழங்கப்பட்ட பின்னர் இந்த மாத தொடக்கத்தில் விடுவிக்கப்பட்டார்.

கடந்த வாரம் தில்லி முதல்வர் பதவியிலிருந்து விலகிய அவர், பிப்ரவரியில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தில்லி மக்களிடமிருந்து நேர்மைக்கான சான்றிதழைப் பெற்ற பிறகு மீண்டும் பதவிக்கு வருவேன் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆர்எஸ்எஸ் நினைவு நாணயம் அரசியலமைப்பை அவமதிக்கும் செயல்: மார்க்சிஸ்ட்!

வரிப் பகிர்வு: தமிழ்நாட்டிற்கு ரூ. 4,144 கோடி, உ.பி.க்கு ரூ. 18,227 கோடி விடுவிப்பு!

சுவையிலும் தரத்திலும் மனதை நிரப்பியதா? Idly Kadai - திரை விமர்சனம் | Dhanush | Arun Vijay

தரக்குறைவாக பதிவிடும் திமுகவினரை கைது செய்யாதது ஏன்? தமிழிசை

"முதல்வர் வெட்கப்பட வேண்டும்!": அண்ணாமலை ஆவேசம்! | செய்திகள்: சில வரிகளில் | 01.10.25

SCROLL FOR NEXT