கோப்புப்படம் 
இந்தியா

தீவிரவாதத் தாக்குதலா? - மும்பையில் பலத்த பாதுகாப்பு!

தீவிரவாத அச்சுறுத்தல் குறித்து மத்திய புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளதையடுத்து மும்பை மாநகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

DIN

தீவிரவாத அச்சுறுத்தல் குறித்து மத்திய புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளதையடுத்து மும்பை மாநகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மும்பையில் தீவிரவாதத் தாக்குதல் நடைபெற வாய்ப்புள்ளதாக மத்திய புலனாய்வு அமைப்புகள் தகவல் தெரிவித்துள்ளன.

இதையடுத்து மும்பையில் மத வழிபாட்டுத் தலங்கள், பொதுக்கூட்டங்கள் நடைபெறும் இடங்கள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு ஒத்திகைகளை நடத்துவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து இடங்களிலும் உயர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மும்பையில் உள்ள அனைத்து கோயில்களிலும் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் தெரிந்தால் புகார் தெரிவிக்குமாறும் விழிப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நவராத்திரி பூஜை, தீபாவளி என மும்பையில் விழாக்கள் நடைபெறவுள்ளன. மகாராஷ்டிரத்துக்கு விரைவில் சட்டப்பேரவைத் தேர்தலும் அறிவிக்கப்பட உள்ளது.

இந்த சூழலில் தீவிரவாத அச்சுறுத்தல் குறித்த தகவல் வந்துள்ளது சற்று பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரகசிய ஆவணங்கள் பதுக்கல்: இந்திய வம்சாவளி ஆலோசகர் கைது

அதிமுக எம்எல்ஏ-க்கள் கருப்புப் பட்டை அணிந்து பேரவைக்கு வருகை!

மதுரையில் பள்ளி மாணவன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!

தீபாவளி: சென்னை பயணிகளுக்கு... சிறப்பு ரயில், சாலை வழித்தட விவரங்கள்!

தீபாவளி: சென்னையில் அக். 22 வரை கனரக வாகனங்களுக்கு வழித்தட மாற்றம்!

SCROLL FOR NEXT