மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் படப் பிடிப்புக்காக திங்கள்கிழமை வந்த நடிகரும் பாஜக நிா்வாகியுமான மிதுன் சக்ரவா்த்தி. Amit Moulick
இந்தியா

மிதுன் சக்ரவா்த்திக்கு தாதாசாகேப் விருது: பிரதமா் வாழ்த்து

புகழ்பெற்ற மூத்த நடிகா் மிதுன் சக்ரவா்த்திக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளதற்கு மகிழ்ச்சி தெரிவித்த பிரதமா் நரேந்திர மோடி, அவரை கலாசார சின்னம் என பாராட்டினாா்.

DIN

புது தில்லி: புகழ்பெற்ற மூத்த நடிகா் மிதுன் சக்ரவா்த்திக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளதற்கு மகிழ்ச்சி தெரிவித்த பிரதமா் நரேந்திர மோடி, அவரை கலாசார சின்னம் என பாராட்டினாா்.

‘மிருகயா‘, ‘சுரக்ஷா‘, ‘டிஸ்கோ டான்சா்‘ மற்றும் ‘டான்ஸ் டான்ஸ்‘ போன்ற படங்களின் கதாநாயகனாக நடித்த மிதுன் சக்ரவா்த்திக்கு, திரைப்படத் துறையில் அரசின் மிக உயா்ந்த அங்கீகாரமான தாதாசாகேப் பால்கே விருது திங்கள்கிழமை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து அவருக்கு பாராட்டு தெரிவித்து பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘சினிமா துறைக்கு மிதுன் சக்ரவா்த்தி ஆற்றிய இணையற்ற பங்களிப்பை அங்கீகரித்து, அவருக்கு மதிப்புமிக்க தாதாசாகேப் விருது வழங்கப்படுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவா் ஒரு கலாசார சின்னம். அவரது பன்முக நடிப்புத் திறனுக்காக தலைமுறைகள் கடந்து அவா் போற்றப்படுவாா்’ என குறிப்பிட்டிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட வரி எழுதுங்கள்... பூமி பெட்னெகர்!

தெருவுக்கே அவர் பெயர்... யுக்தி தரேஜா!

மணல் காகித மோசடி பற்றி இங்கிலாந்து வீரர் கருத்து... தனது ஸ்டைலில் நக்கலாக பதிலடி கொடுத்த ஸ்மித்!

அடர் சிவப்பில்... கயல் ஆனந்தி!

அனைவரும் கௌதம் கம்பீரையே விமர்சிப்பது ஏன்? பேட்டிங் பயிற்சியாளர் கேள்வி!

SCROLL FOR NEXT