பிரதமர் நரேந்திர மோடியின் ஜிப்லி படங்களை ஓபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் பகிர்ந்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியால் இந்திய மக்கள் பலரும் ஜிப்லி அம்சத்தைப் பயன்படுத்துவார்கள் என்பதைக் குறிக்கும் வகையில் இந்திய தேசியக் கொடியைக் குறிப்பிட்டு மோடியின் படங்களைப் பகிர்ந்துள்ளார்.
அப்படங்களில் பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் உள்ளிட்டோருடன் இருக்கும் படங்களையும் பகிர்ந்துள்ளார்.
உலக நாடுகளின் தலைவர்கள் ஜிப்லி அம்சத்தைப் பயன்படுத்தி தங்கள் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளதைக் காணும்போத் அந்நாட்டு மக்களும் ஜிப்லியைப் பயன்படுத்துவார்கள் என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையில் பிரபலங்களின் ஜிப்லி படங்களை ஆல்ட்மேன் பகிர்ந்து வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக மத்திய அரசு தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்திருந்த படங்களை மறுபகிர்வு செய்துள்ளார் சாம் ஆல்ட்மேன்.
ஜிப்லி என்றால் என்ன?
சாட்ஜிபிடியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய அம்சம் ஜிப்லி. இது சாட்ஜிபிடியின் செய்யறிவு நுட்பத்தைப் பயன்படுத்தி புகைப்படங்களை ஓவியமாக மாற்றுகிறது. மேம்படுத்தப்பட்ட புதிய ஜிபிடி - 4.0 என்னும் புகைப்பட ஊக்கியின் மூலம் ஜிப்லி சேவை வழங்கப்படுகிறது.
இதன்மூலம் பயனர்கள் வழங்கும் புகைப்படங்களில் உள்ள உருவங்கள் மற்றும் பின்னணிகளை ஓவியமாக மாற்றி, ஜிப்லி வழங்குகிறது. இது பெரும்பாலும் அனிமி எனப்படும் ஜப்பான் கார்ட்டூன் கதாபாத்திர வடிவை பிரதிபலிக்கிறது.
உலகம் முழுவதும் பல்வேறு பயனர்கள் இந்த ஜிப்லி அம்சத்தைப் பயன்படுத்தி தங்கள் புகைப்படங்களை கார்டூன் ஓவியமாக மாற்றி அதனை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | ஒரு மணிநேரத்தில் 10 லட்சம் பயனர்கள்! ஜிப்லியால் சாட்ஜிபிடி சாதனை!!
இதையும் படிக்க | செலவில்லாமல் ‘ஜிப்லி’ படங்களை உருவாக்குவது எப்படி?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.