ஜகதாம்பிகா பால்  ANI
இந்தியா

இன்று வரலாற்று சிறப்புமிக்க நாள்: வக்ஃப் கூட்டுக் குழுத் தலைவர்

வக்ஃப் சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்படவிருப்பது பற்றி...

DIN

நாடாளுமன்றத்தில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது குறித்து கூட்டுக்குழுத் தலைவர் ஜகதாம்பிகா பால் கருத்து தெரிவித்துள்ளார்.

வக்ஃப் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் இன்று(ஏப். 2) தாக்கல் செய்யப்பட்டு, 8 மணி நேரம் விவாதம் நடத்தவுள்ளதாகவும், தேவைப்படும்பட்சத்தில் விவாத நேரத்தை அதிகரிக்கவுள்ளதாகவும் மத்திய சிறுபான்மை மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், மசோதா தாக்கல் செய்யப்படவிருப்பது எங்கள் கடின உழைப்புக்கு கிடைத்த பலன் என்று வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவுக்கு அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுத் தலைவர் ஜகதாம்பிகா பால் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் கூறியதாவது:

”இன்று திருத்தப்பட்ட மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ளது. இது நிச்சயமாக ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள். மசோதா நிறைவேற்றப்படுவதன் மூலம், ஏழை இஸ்லாமிய மக்கள் பயனடையப் போகிறார்கள்.

கடந்த 6 மாதங்களாக நாங்கள் கூட்டுக் குழுவில் ஆலோசித்துள்ளோம். எதிர்க்கட்சிகள் நாள்தோறும் 8 மணிநேரம் பேசியதை நாங்கள் கேட்டிருக்கிறோம்.

எதிர்க்கட்சிகளும் அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட வாரியமும் ரம்ஜான் தொழுகையின்போது மசூதிகளில் கருப்பு பட்டை அணியுமாறு கூறியது, இந்த பிரச்னையை அரசியலாக்குகின்றனர்” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரே ஒரு வங்கிக் கணக்கு வைத்திருக்கிறீர்களா? ஆபத்து

ராகுலின் குற்றச்சாட்டு தவறானவை, ஆதாரமற்றவை! தேர்தல் ஆணையம்

காஸா மூச்சுத் திணறுகிறது; இந்த பயங்கரத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்: முதல்வர் பதிவு

ஒரு ஏழைத்தாயின் மகன்... விமர்சனத்திற்கு ஆளாகும் ஜிவி பிரகாஷ்!

முன்னாள் முதல்வர் சதானந்த கௌடாவின் வங்கிக் கணக்குகளை ஹேக் செய்து ரூ. 3 லட்சம் திருட்டு!

SCROLL FOR NEXT