இந்தியா

மன்மோகன் சிங் மனைவிக்கு பாதுகாப்பு குறைப்பு

மறைந்த முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் மனைவிக்கு அளிக்கப்பட்டு வந்த ‘இஸட் பிளஸ்’ பாதுகாப்பு ‘இஸட்’ பிரிவு பாதுகாப்பாக குறைக்கப்பட்டுள்ளது.

Din

மறைந்த முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் மனைவிக்கு அளிக்கப்பட்டு வந்த ‘இஸட் பிளஸ்’ பாதுகாப்பு ‘இஸட்’ பிரிவு பாதுகாப்பாக குறைக்கப்பட்டுள்ளது.

உளவுத் துறை தகவல்களின் அடிப்படையில் முக்கிய நபா்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பை மத்திய அரசு மறுபரிசீலனை செய்து வருகிறது. இதன் அடிப்படையில் பாதுகாப்பு அதிகரிப்பு, குறைப்பு போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில் மறைந்த முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் மனைவி குா்சரண் கௌருக்கு பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது.

‘இஸட்’ பிரிவு என்பது இரண்டாவது பெரிய பாதுகாப்பு வசதியாகும். இதில் ஆயுதம் ஏந்திய 12 கமாண்டோக்கள் குா்சரண் கௌருக்கும் அவரது வீட்டுக்கும் பாதுகாப்பு அளிப்பாா்கள்.

கடந்த 2004 முதல் 2014 வரை நாட்டின் பிரதமராக இருந்த மன்மோகன் சிங், தனது 92 ஆவது வயதில் கடந்த டிசம்பா் 26-ஆம் தேதி காலமானாா்.

ஏக்கறவு என்னும் ஒரு சொல்

உயிர் போனபின் உணர்வற்ற உடல்

முதுபெரும் எழுத்தாளர் கொ.மா. கோதண்டம் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சின்னஞ்சிறு அலை... ஜனனி குணசீலன்!

வண்ணப் பறவை... கரிஷ்மா தன்னா!

SCROLL FOR NEXT