சி-17 விமானம் மூலம் கூடுதலாக 442 மெட்ரிக் டன் நிவாரண பொருள்களை இந்தியா அனுப்பியது. 
இந்தியா

மியான்மருக்கு 442 டன்கள் உணவுப் பொருள்களை இந்தியா அனுப்பியது

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மா் நாட்டுக்கு சி-17 விமானம் மூலம் கூடுதலாக 442 மெட்ரிக் டன் நிவாரண பொருள்களை இந்தியா அனுப்பியது.

DIN

புது தில்லி: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மா் நாட்டுக்கு சி-17 விமானம் மூலம் கூடுதலாக 442 மெட்ரிக் டன் நிவாரண பொருள்களை இந்தியா அனுப்பியது.

மியான்மரில் கடந்த மார்ச் 28 ஆம் தேதி சகாய்ங் நகரின் வடமேற்கே 16 கி.மீ தொலைவில் பயங்கர தொடா் நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் நாட்டின் பல பகுதிகள் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்தன. குடியிருப்புகள் உள்பட ஏராளமான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இதில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனா். அங்கு மீட்புப் பணிகள் தொடர்ந்து வருகின்றன.

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு இந்தியா தேசிய பேரிடர் மீட்புக் குழு மற்றும் மருத்துவக் குழுவையும் அனுப்பி வைத்துள்ளது. சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகளும் உதவி வருகின்றன.

இதனைத் தொடர்ந்து ‘ஆபரேஷன் பிரம்மா’ திட்டத்தின் கீழ் கூடாரங்கள், போா்வைகள், அத்தியாவசிய மருந்துப் பொருள்கள், மருத்துவ உபகரணங்கள், உணவுப் பொருள்கள் என 442 மெட்ரிக் டன் நிவாரண உதவிகளை இந்தியா அனுப்பியுள்ளது.

இந்த நிலையில், மியான்மரில் முகாமிட்டுள்ள இந்திய ராணுவ மருத்துவ குழுவினருக்கு தேவையான பொருள்கள் உள்பட 31 டன்கள் அளவிலான நிவாரண பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நிவாரண பொருள்கள் யாங்கூன் நகரின் தெற்கு கடலோரப் பகுதியில் அமைந்துள்ள திலவா துறைமுகத்தில், யாங்கூன் மாகாண முதல்வரின் வழங்கப்பட்டது என யாங்கூனில் உள்ள இந்தியத் தூதரத்தின் எக்ஸ் வலைதள பக்கத்திலும், வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கரும் பதிவிட்டுள்ளனர்.

மியான்மருக்கு மனிதாபிமான அடிப்படையில் நிவாரண உதவிகளை வழங்க குவாட் நாடுகளான இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜாப்பான் நாடுகள் சேர்ந்து 20 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எடப்பாடியார் இன்றுமுதல் முகமூடியார் என்று அழைக்கப்படுவார்! டிடிவி தினகரன்

இட ஒதுக்கீடு போராட்டத் தியாகிகள் நினைவு நாள்: ராமதாஸ், அன்புமணி தனித்தனியே மரியாதை!

3 நாள் டிஜிட்டல் அரெஸ்ட்: மாரடைப்பில் ஓய்வுபெற்ற மருத்துவர் மரணம்!

விழா மேடையில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்தம்! கண்கலங்கிய அர்ச்சனா!

இந்தியா-பாகிஸ்தான் மோதலில் மூன்றாம் தரப்பு தலையீடு இல்லை: ராஜ்நாத் சிங்!

SCROLL FOR NEXT