மாணவர் விடுதிக்குள் காதலியை சூட்கேஸில் மறைத்துக் கொண்டுவந்தவர் சிக்கியது எப்படி?
மாணவர் விடுதிக்குள் காதலியை சூட்கேஸில் மறைத்துக் கொண்டுவந்தவர் சிக்கியது எப்படி?
ஹரியாணா மாநிலம் சோனிபட் பகுதியில் இயங்கும் பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதிக்குள் தனது காதலியை சூட்கேஸில் மறைத்துக் கொண்டுவர முயன்ற மாணவர்கள் வசமாகச் சிக்கினார்.
சினிமா திரைப்படங்களில் வருவது போல, பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதிக்குள், தனது காதலியை அழைத்துச் செல்ல விரும்பிய மாணவர், ஒரு சூட்கேஸில் மாணவியை அடைத்து எடுத்துச் சென்றார்.
ஆனால், சூட்கேஸுடன் மாணவர் விடுதிக்குள் நுழைந்தபோதே, அங்கிருந்த பாதுகாவலர்களுக்கு அவர் மீது சந்தேகம் வலுத்துவிட்டது. தூக்கிச் செல்ல முடியாத அளவுக்கு எடையுடன் இருந்த அந்த சூட்கேஸை, பெண் பாதுகாவலர்களுடன் சேர்ந்து பிரித்துப் பார்த்தபோது, அதில் யாருமே எதிர்பாராத வகையில், ஒரு பெண் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
அங்கே இருந்த ஒரு மாணவர் யாருக்கும் தெரியாமல், முழு சம்பவத்தையும் விடியோ எடுத்து அது தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
ஆனால், அந்த சூட்கேஸ் மீது உண்மையில் காவலாளிகளுக்கு சந்தேகம் வந்தது எப்படி என்பது இதுவரை தெரியவரவில்லை. மேலும், அந்த பெண், மாணவரின் காதலி என்றும், அவரை யாருக்கும் தெரியாமல் மாணவர் விடுதிக்குள் அழைத்துச் செல்ல முயன்று சிக்கிக் கொண்டதும் தெரிய வந்துள்ளது. ஆனால், அந்தப் பெண், அதேக் கல்லூரி மாணவியா, அல்லது வெளி நபரா என்ற தகவல் கிடைக்கப்பெறவில்லை.