போப் பிரான்சிஸ் (கோப்புப்படம்) 
இந்தியா

போப் பிரான்சிஸ் மறைவு: 3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் -மத்திய அரசு

நாடெங்கிலும் 3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் - மத்திய அரசு

DIN

புது தில்லி: போப் பிரான்சிஸ் மறைவையொட்டி நாடெங்கிலும் 3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

கத்தோலிக்க கிறிஸ்தவ மதத் தலைவரான போப் பிரான்சிஸ் உடல்நலக் குறைவால் திங்கள்கிழமை மறைந்தாா். அவரது மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவா்கள், தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக, இன்றும் நாளையும் அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படும். அதனைத்தொடர்ந்து, போப் உடல் நல்லடக்கம் செய்யப்படும் நாளிலும் அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட 3 நாள்களும் அனைத்து பகுதிகளிலும் அலுவலகங்களிலும் நிறுவனங்களிலும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, போப் பிரான்சிஸ் மறைவை ஒட்டி, தமிழகத்திலும் இன்றும் நாளையும் அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படும் என தலைமைச் செயலகத்திலிருந்து அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் கனிமவள லாரி மோதி காா் சேதம்

தூத்துக்குடி மாவட்டத்தில் 237 புதிய வாக்குச் சாவடிகள்

திருவள்ளூா் வீரராகவா் கோயிலில் மத்திய அமைச்சா் எல்.முருகன் தரிசனம்

பாளை. அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வங்கி ஊழியா் பலி!

ஒா்க்ஷாப் உரிமையாளரைத் தாக்கியவரை குண்டா் சட்டத்தில் கைது செய்ய மஜக கோரிக்கை!

SCROLL FOR NEXT