முகப்பு
இந்தியா

பஹல்காம் தாக்குதல்: பலியானோர் உடலுக்கு அமித் ஷா அஞ்சலி!

பஹல்காம் தாக்குதல்: பலியானோர் உடலுக்கு அமித் ஷா அஞ்சலி.

Updated On : 23 ஏப்ரல், 2025 at 10:49 AM
பல்ஹாம் பயங்கரவாதத் தாக்குதலில் பலியானோர் உடலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மலர் வளையம் வைத்து அஞ்சலி.
பகிர்:

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் பலியானோர் உடலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நடத்திய கொடூர துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 2 வெளிநாட்டினர் உள்பட 28 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.

தாக்குதலில் உயிரிழந்தவர்களில் கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த தலா இருவர், உத்தர பிரதேசம், ஹரியாணா, குஜராத்தைச் சேர்ந்த தலா ஒருவர் உள்பட 28 பேரில் 22 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேபோல், உயிரிழந்த 2 வெளிநாட்டவர்கள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் படிக்க: மோடியிடம் சொல்! கணவரைக் கொன்ற பயங்கரவாதிகள் சொல்லியனுப்பிய செய்தி!

அரசு முறைப் பயணமாக சௌதி அரேபியா சென்றிருந்த பிரதமர் மோடி, நேற்று பிற்பகல் நடந்த துப்பாக்கிச் சூடு குறித்து மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் ஆலோசனை நடத்திய நிலையில், இன்று காலை நாடு திரும்பினார். மேலும், அதற்கு முன்னதாக நேற்று ஜம்மு - காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் வந்த அமைச்சர் அமித் ஷா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

செவ்வாய்க்கிழமை இரவு ஸ்ரீநகருக்கு வந்த அமித் ஷா, இன்று காலை அனந்த்நாக் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையில் நடைபெற்ற நிகழ்வில் இறந்தவர்களின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதையும் படிக்க: பயங்கரவாத தாக்குதல்: திருமணமான 7 நாள்களில் கடற்படை அதிகாரி பலியான சோகம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.