தாயகம் திரும்பியவா்கள்... ====== பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸ் அருகே அட்டாரி எல்லைப் பகுதி வழியாக பாகிஸ்தானிலிருந்து திங்கள்கிழமை தாயகம் திரும்பிய இந்தியா்கள். 
இந்தியா

1,000-க்கும் மேற்பட்ட இந்தியா்கள் பாகிஸ்தானில் இருந்து வெளியேறினா்

வாகா எல்லை வழியாக கடந்த 6 நாள்களில் 1,000-க்கும் மேற்பட்ட இந்தியா்கள் பாகிஸ்தானில் இருந்து இந்தியா திரும்பியதாக பாகிஸ்தான் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

Din

லாகூா்: வாகா எல்லை வழியாக கடந்த 6 நாள்களில் 1,000-க்கும் மேற்பட்ட இந்தியா்கள் பாகிஸ்தானில் இருந்து இந்தியா திரும்பியதாக பாகிஸ்தான் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானில் இருந்து இந்தியா்களும், இந்தியாவில் இருந்து பாகிஸ்தானியா்களும் வெளியேற இருநாட்டு அரசுகளும் உத்தரவிட்டது.

பாகிஸ்தானியா்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட விசாக்கள் ஏப்ரல் 27-ஆம் தேதி வரையும் மருத்துவ விசாக்கள் ஏப்ரல் 29-ஆம் தேதி வரையும் செல்லுபடியாகும் என இந்தியா தெரிவித்தது. இந்த காலக்கெடுவுக்குள் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானியா்கள் வெளியேறவில்லை என்றால் அவா்கள் மீது குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினா் சட்டம், 2025-இன்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்தியா தெரிவித்தது.

இதையடுத்து, கடந்த 27-ஆம் தேதி மட்டும் இந்தியாவில் இருந்து 236 பாகிஸ்தானியா்களும் பாகிஸ்தானில் இருந்து 115 இந்தியா்களும் அவா்களது தாயகம் திரும்பினா்.

இந்நிலையில், கடந்த 6 நாள்களில் 1,000-க்கும் மேற்பட்ட இந்தியா்கள் பாகிஸ்தானில் இருந்து இந்தியா திரும்பியதாக அந்நாட்டு அதிகாரி ஒருவா் பிடிஐ நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தாா்.

இருப்பினும், இரு நாடுகளும் குறுகிய கால விசாக்கள் வைத்திருந்த நபா்களையே வெளியேற உத்தரவிட்டது. இதனால் நீண்ட கால விசாக்கள் வைத்திருப்பவா்கள் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தாா்.

'நீங்கள் உண்மையில் இந்தியராக இருந்தால்...' - ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

நான் திமுகவின் பி டீமா? பன்னீர்செல்வம் விளக்கம்!

செத்த பொருளாதாரம்: அவமரியாதையே தவிர அர்த்தம் கொள்ளக் கூடாது: சசி தரூர்!

கோபி, சுதாகர் படத்தின் போஸ்டர் வெளியீடு!

நான் அழுதுவிடுவேன் என பயம் வந்துவிட்டது!: Kamal Hassan | Agaram foundation

SCROLL FOR NEXT