முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் 
இந்தியா

பஹல்காமில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: ஃபட்னவீஸ்

பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி..

DIN

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உயிரிழந்தோரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் பலியாகினர். இதில் 6 பேர் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

பஹல்காமில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சரவை அஞ்சலி செலுத்தியது. பஹல்காம் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி அளிக்க மகாராஷ்டிர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும், கப்பல் கட்டுதல், விவசாயிகளுக்கான திருத்தப்பட்ட பயிர் காப்பீட்டுக் கொள்ளை உள்பட 12 முக்கிய முடிவுகளை முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தலைமையிலான மகாராஷ்டிர அமைச்சரவை எடுத்துள்ளது.

இதனிடையே, பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்.

பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குழந்தைகளின் கல்விக்கு மாநில அரசு கவனம் செலுத்தும். இறந்தவர்களில் நேரடி வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்கும் என்றும் அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுமி உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை!

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: நலத் திட்ட உதவிகள் வழங்கினாா் எம்எல்ஏ

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

தேவை இல்லை என்ற நிலையை உருவாக்கினால் மது ஒழிப்பு சாத்தியம் - சி. மகேந்திரன்

ஆம்பூரில் பலத்த மழை

SCROLL FOR NEXT