இந்தியா

மணிப்பூரில் சட்டவிரோத குடியேறிகளைக் கண்டறியச் சோதனை!

மணிப்பூர் காவல்துறை மாநிலம் முழுவதும் சட்டவிரோதமாகத் தங்கியிருப்பவர்களைக் கணக்கெடுக்கும் பணி..

DIN

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து மணிப்பூர் காவல்துறை மாநிலம் முழுவதும் சட்டவிரோதமாகத் தங்கியிருப்பவர்களைக் கணக்கெடுக்கும் சோதனையை மணிப்பூர் காவல்துறை தொடங்க உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் பலியாகினர். இதையடுத்து, மாநிலம் முழுவதும் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களைக் கணக்கெடுக்கும் பணி தொடங்கவுள்ளது. மேலும் வங்கதேச மற்றும் பாகிஸ்தானிய நாட்டினர் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியுள்ளனரா என்பதைக் கண்டறியவும் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

முக்கியமாக இம்பால் பள்ளத்தாக்கின் லிலாங், மினுதோங், குவாக்டா, மாயாங் இம்பால், சோரா, கைராங் போன்ற பகுதிகளில் செல்லுபடியாகும் விசா இல்லாமல் சட்டவிரோத வங்கதேச/பாகிஸ்தானிய நாட்டினர் தங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து மணிப்பூர் காவல்துறை இந்த கணக்கெடுப்பை நிகழ்த்துகிறது.

சட்டவிரோத குடியேறியவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் தகுந்த சட்ட நடவடிக்கைகளை எடுக்கவும் உயர் போலீஸ் அதிகாரிகள், உள்ளூர் காவல் நிலையங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி கூறினார். காவல்துறையினர் சரியான பதிவுகளைப் பராமரிக்கக் காவல் நிலையங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பதி அறக்கட்டளைக்குத் தொழிலதிபர் ரூ.1 கோடி நன்கொடை!

நாளை (ஆக. 8) மறுவெளியீடாகும் சுந்தரா டிராவல்ஸ்!

ரூ.3 லட்சம் சம்பளத்தில் மாலுமிப் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

கவின் கொலை: சிபிசிஐடி காவலுக்கு சுர்ஜித், தந்தை சரவணன் தரப்பு எதிர்ப்பு

சினிமாவில் 50 வருடம்! 5500 புகைப்படங்களால் Rajini கோயிலுக்கு அலங்காரம்!

SCROLL FOR NEXT