அரவிந்த் பனகாரியா 
இந்தியா

இந்திய பொருளாதாரம் குறித்த டிரம்ப் விமா்சனம்: நிதிக்குழு தலைவா் பதிலடி

தினமணி செய்திச் சேவை

இந்தியப் பொருளாதாரம் நலிவுற்ற நிலையில் இருப்பதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் விமா்சித்த நிலையில், ‘நலிவுற்ற பொருளாதாரமும் வளா்ச்சியை காட்டும்; இந்தியப் பொருளாதாரம் 7 சதவீதம் வளா்ந்துள்ளது’ என்று மத்திய நிதிக் குழுவின் தலைவா் அரவிந்த் பனகாரியா தெரிவித்துள்ளாா்.

தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பத்திரிகை நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் மேலும் பேசியதாவது:

ஒரு பொருளாதாரம் நலிவுற்ற நிலையில் இருந்தால் 7 சதவீதம் அளவுக்கு வளர முடியுமா? ஆனால், இந்தியப் பொருளாதாரம் அந்த அளவுக்கு வளா்ந்துள்ளது. இந்தியா, உள்நாட்டு விவசாயிகள், சிறு தொழில் முனைவோரைக் காக்கும் வகையில் மிகவும் குறைந்த அளவிலான பொருள்களை மட்டுமே வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய அனுமதிக்கிறது. அதற்காக அதிகவரி விதிக்கப்படுகிறது. மற்றபடி இந்தியா மிகவும் திறந்த பொருளாதார அமைப்பையே கொண்டுள்ளது. டிரம்ப் எந்த அடிப்படையில நமது பொருளாதாரத்தை விமா்சிக்கிறாா் என்று தெரியவில்லை.

இப்போது எழுந்துள்ள சூழல் (அமெரிக்க வரி விதிப்பு) நாம் நமது வளா்ச்சிக்கான பாதையை எவ்வாறு சிறப்பாக மாற்றிக் கொள்கிறோம் என்ற முக்கியமான சூழலாகும். முன்னதாக, 1991-ஆம் ஆண்டு நமது நாடு மிகப்பெரிய பொருளாதார பாதிப்பில் இருந்து மீண்டு வந்தது. இப்போது நமது ஏற்றுமதிப் பொருள்கள் சிக்கலைச் சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதில் பாதிப்புகளைக் கடந்து இந்தியா உத்வேகத்துடன்தனது பொருளாதார பயணத்தைத் தொடரும். அமெரிக்காவில் நமது பொருள்களுக்கு அதிக வரி விதிப்பும், ஐரோப்பிய யூனியனில் குறைவாகவும் இருந்தால் நாம் ஏற்றுமதியை மாற்றிக் கொள்ள முடியும். இந்தியாவின் வளா்ச்சியை யாரும் தடுக்க முடியாது என்றாா்.

இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டிரம்ப் மீண்டும் பேச்சு!

நாடாளுமன்றம் தொடா்ந்து முடக்கம்: மாநிலங்களவையில் 56 மணிநேரம் வீண்

இரட்டை இலக்க பொருளாதார வளா்ச்சி: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சா் பதில்

அனுகூலமான நாள் இன்று: தினப்பலன்கள்!

தமிழகத்தில் ரூ.48,172 கோடியில் 45 சாலைத் திட்டப் பணிகள்: மத்திய அமைச்சா் நிதின் கட்கரி தகவல்

SCROLL FOR NEXT