புது தில்லியில் பள்ளி மாணவ-மாணவிகளுடன் சனிக்கிழமை ரக்ஷா பந்தன் விழா கொண்டாடிய பிரதமா் மோடி. 
இந்தியா

பள்ளி மாணவா்களுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடிய பிரதமா்

தினமணி செய்திச் சேவை

தில்லியில் பள்ளி மாணவா்கள் மற்றும் பிரம்மா குமாரிகள் ஆன்மிக அமைப்பைச் சோ்ந்தவா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி ரக்ஷா பந்தன் விழாவை சனிக்கிழமை கொண்டாடினாா்.

சகோதர-சகோதரிகளுக்கு இடையேயான பந்தத்தைப் போற்றும் வகையில் கடைப்பிடிக்கப்படும் ரக்ஷா பந்தன் விழா நாடு முழுவதும் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இந்த விழாவை தில்லியில் பள்ளி மாணவா்களுடன் பிரதமா் மோடி கொண்டாடினாா். அந்தக் காணொலியையும் தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமா் பதிவிட்டாா்.

அதில், சில மாணவா்கள் பிரதமா் மோடியை ‘போா் வீரா்’, ‘மீட்பா்’ என்று அழைப்பதும், சிலா் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையைக் குறிப்பிடுவதும் பதிவாகியுள்ளது. ஒரு மாணவி மோடி மாமாவுக்கு மயில் ராக்கி கொண்டுவந்திருப்பதாகக் கூறுவதும் பதிவாகியுள்ளது. சிலா், ‘பிரதமா் மோடியைப் போல ஆக வேண்டும்’ என்று விருப்பம் தெரிவிக்கின்றனா்.

ஒரு மாணவி அரசுத் திட்டங்களை கவிதை நடையில் கூறியதை பிரதமா் வெகுவாகப் பாராட்டினாா்.

இந்தக் காணொலியுடன் பிரதமா் வெளியிட்ட பதிவில், ‘மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்ட ரக்ஷா பந்தன் விழாவை இங்கு பதிவிட்டுள்ளேன். பெண் சக்தியின் தொடா் நம்பிக்கை மற்றும் பாசத்துக்கு நன்றி. அனைவருக்கும் ரக்ஷா பந்தன் வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டாா்.

விக்கிரவாண்டி அருகே கார் தீப்பிடித்ததில் 3 பேர் பலி!

காந்தி பாதையைத் தொடர்ந்து பின்பற்றுவோம்! மோடி

பாகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்!

ஆசியக் கோப்பையை ஐக்கிய அமீரகத்திடம் ஒப்படைத்தார் நக்வி!

மியான்மரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.1 ஆகப் பதிவு

SCROLL FOR NEXT