வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடைபெறவுள்ள பேரணிக்கு தில்லி காவல்துறையினரிடம் அனுமதி கோரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலின்போது, வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்யப்பட்டு வாக்குத் திருட்டு நடைபெற்றதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சான்றுகளுடன் கடந்த வாரம் குற்றச்சாட்டை எழுப்பினார்.
இதனைத் தொடர்ந்து, வாக்குத் திருட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராகுல் காந்தி தலைமையில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உள்ள எதிர்க்கட்சிகளை சேர்ந்த 300 எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணைய அலுவலகம் வரை ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு இன்று பேரணி செல்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், எதிர்க்கட்சி எம்பிக்களின் பேரணிக்கு இதுவரை எவ்வித அனுமதி கோரவில்லை என்று தில்லி காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளருடன் பேசிய சமாஜவாதி எம்பி ராம்கோபால் யாதவ், ”தில்லியின் தெருக்களில் நடக்க எம்.பி.க்களுக்கு அனுமதி தேவையில்லை. எம்.பி.க்கள் சாலைகளில் பேரணி செல்வதில் ஏதேனும் அச்சுறுத்தல் இருப்பதாக இருந்தால், இந்த அமைப்பே பயனற்றது.” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.