உக்ரைன் அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி கோப்புப் படம் (AP)
இந்தியா

டிரம்ப்பின் வரி விதிப்பு... உக்ரைன் அதிபருடன் பேசிய மோடி!

உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கியுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக இன்று (ஆக. 11) பேசினார்.

இணையதளச் செய்திப் பிரிவு

உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக இன்று (ஆக. 11) பேசினார்.

ரஷியாவுடன் போர் நடைபெற்று வரும் நிலையில், உக்ரைனின் தற்போதைய நிலவரம் குறித்து மோடி கேட்டறிந்தார்.

அத்துடன், விரைவில் அப்பிராந்தியங்களில் அமைதி திரும்புவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் இந்தியாவின் நிலைத்தன்மையையும் மோடி எடுத்துரைத்தார்.

உக்ரைனில் இயல்பு நிலை திரும்புவதற்குத் தேவையான அனைத்து வகையான உதவிகளையும் செய்ய, இந்தியா தயாராக உள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

மேலும், இந்தியா - உக்ரைன் நாடுகளுக்கு இடையிலான கூட்டுறவில் முன்னேற்றம், பரஸ்பர நலன்களில் உள்ள கூட்டு ஒத்துழைப்பை மேம்படுத்துவது உள்ளிட்டவை குறித்து இரு நாட்டு தலைவர்களும் மதிப்பாய்வு செய்தனர்.

உக்ரைன் அதிபர் உடனான பேச்சு குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளதாவது,

''உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பேச வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. அப்பகுதியில் நிலவிவரும் பதற்றமான சூழலை, விரைவாகவும் அமைதியான முறையிலும் தீர்க்க வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை அவரிடம் தெரிவித்தேன்.

இதற்குத் தேவையான பங்களிப்பையும் இந்தியா செய்யும் என உறுதி அளித்தேன். அதே நேரம் உக்ரைனுடன் உறவை மேலும் வலுப்படுத்தவும் இந்தியா தனது முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்றும் தெரிவித்தேன்'' எனப் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா உள்பட மற்ற நாடுகளின் மீது அதிக வரிவிதிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில், உக்ரைன் அதிபருடன் மோடி பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | சிந்து நதியில் இந்தியா அணை கட்டினால் தகர்ப்போம்! பாகிஸ்தான் ராணுவ தளபதி

Prime Minister Narendra Modi had a telephone conversation today with the President of Ukraine

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

யாரோ... யார் யாரோ... அனைரா குப்தா!

மக்களவையில் அமளிக்கிடையே 3 நிமிடங்களில் நிறைவேற்றப்பட்ட புதிய வருமான வரி மசோதா!

வெண்புறா... ஜான்வி கபூர்!

உலகக் கோப்பையில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும்: மிதாலி ராஜ்

SCROLL FOR NEXT