இந்தியா

கோவா பேரவையில் எஸ்.டி. இடஒதுக்கீடு: நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்

கோவா சட்டப் பேரவையில் பழங்குடியினருக்கு (எஸ்.டி) இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்

Chennai

கோவா சட்டப் பேரவையில் பழங்குடியினருக்கு (எஸ்.டி) இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் மசோதா மாநிலங்களவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதா ஏற்கெனவே கடந்த 5-ஆம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்டுவிட்டது. இதன் மூலம் மசோதாவுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒப்புதல் கிடைத்துள்ளது.

மாநிலங்களவையில் சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் இந்த மசோதாவைக் கொண்டு வந்தாா். அப்போது, இந்த மசோதா மூலம் கோவா சட்டப் பேரவையில் எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு கிடைப்பது உறுதி செய்யப்படும். 40 உறுப்பினா்களைக் கொண்ட கோவா பேரவையில் ஓா் இடம் எஸ்.டி. பிரிவினருக்கு ஒதுக்கப்படும். இப்போது அப்பிரிவினரின் பிரதிநிதித்துவம் பேரவையில் இல்லை என்றாா். இதைத் தொடா்ந்து மாநிலங்களவையில் பெரும்பான்மையான உறுப்பினா்கள் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது.

மேலும் ஒரு மசோதா: மாநிலங்களவையில் வணிகக் கப்பல் போக்குவரத்து சட்ட மசோதா திங்கள்கிழமை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் இரு அவைகளிலும் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது.

முன்னதாக, பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்ததை விவகாரத்தை விவாதிக்காமல் மசோதாக்களை நிறைவேற்ற எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனா். இதனால் அவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது. பின்னா் அவை மூன்று மணிக்கு மீண்டும் கூடியபோது மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மக்களவையில் கடந்த 6-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் இரு அவைகளிலும் மசோதா நிறைவேறியது.

இந்தியாவுக்கான வரிவிதிப்பால் ரஷிய பொருளாதாரம் கடும் பாதிப்பு! - அதிபர் டிரம்ப்

தங்கம் விலை 2 நாள்களில் ரூ.1200 குறைவு: இன்றைய நிலவரம்!

பலூச் விடுதலைப் படை, மஜீத் படைப்பிரிவுகள் பயங்கரவாதக் குழுக்கள்: அமெரிக்கா அறிவிப்பு!

‘தாயுமானவர் திட்டம்’ இந்தியாவுக்கே முன்மாதிரி! - விடியோ வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

குழப்பம் நீங்கும் விருச்சிகத்துக்கு.. தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT