பாஜக சொன்ன வயநாடு வாக்குத் திருட்டுப் புகாரில், அது முகவரியே அல்ல, ஒரு பகுதியின் பெயர். பாஜகவின் பொய், வெளிச்சத்துக்கு வந்துவிட்டது என்று காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் வயநாடு தொகுதியில், சௌந்தேரி என்ற ஒரு முகவரியில் 4,000 பேர் வாழ்வதாக பாஜக தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அனுராக் தாக்கூர் குற்றம்சாட்டியிருந்தார்.
மேலும், வண்டூர், எர்ணாடு, கல்பெட்டா உள்ளிட்ட பேரவைத் தொகுதிகளில் கள்ள வாக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் ஒரே முகவரியில் 4,000 பேர் வாழ்வதாக பாஜக வெளிப்படுத்திய 'வாக்குத் திருட்டு' குற்றச்சாட்டை காங்கிரஸ் மறுத்துள்ளது, சௌந்தேரி என்ற முகவரியில் 4000 பேர் வாழவில்லை. 'சௌந்தேரி' என்பது ஒரு வீட்டு முகவரியே அல்ல, கேரளத்தின் ஒரு பகுதி. அந்தப் பகுதியில் 4000 வாக்காளர்கள் உள்ளனர் என்று கள நிலவங்களை மேற்கோள்காட்டி காங்கிரஸ் பதிலளித்துள்ளது.
இது தொடர்பாக, கேரளத்தில் பல்வேறு ஊடகங்களும் சௌந்தேரி பகுதியில் நேரடியாகச் சென்று மக்களிடம் எழுப்பிய கேள்விகளும் அவர்கள் அளித்த பதில்களும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
பாஜகவினர் எவ்வாறு மக்களை முட்டாளாக்குகிறார்கள் என்றும் காங்கிரஸ் கேள்வி எழுப்பியிருக்கிறது.
ஒரு சில நாள்களுக்கு முன்பு, நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மத்தியில் ஆளும் பாஜக அரசுடன் சேர்ந்து தேர்தல் ஆணையமும் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாகக் கூறி பல்வேறு குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் முன்வைத்திருந்தார்.
கர்நாடக மாநிலத்தில் ஒரே தொகுதியில் ஒரு லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டது உள்ளிட்ட பல தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், பாஜக, வயநாடு தொகுதி குறித்து குற்றச்சாட்டுகளை எழுப்ப அது உண்மையில்லை என்று காங்கிரஸ் விளக்கம் கொடுத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.