வாகா எல்லையில் தேசிய கொடி இறக்கும் நிகழ்ச்சி. (கோப்புப் படம்)
இந்தியா

வாகா எல்லையில் தேசியக் கொடி இறக்கும் நிகழ்ச்சி! வீறுநடை போட்ட ராணுவ வீரர்கள்!

அட்டாரி - வாகா எல்லையில் கொடியிறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றதைப் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியான அட்டாரி - வாகா எல்லையில் தேசியக் கொடியிறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பஞ்சாப் மாநிலத்தில் இந்தியா - பாகிஸ்தான் எல்லைப்பகுதி அமைந்துள்ளது. இந்தியாவின் அடாரி மற்றும் பாகிஸ்தானின் வாகா பகுதிகள் இதன் எல்லைப் பகுதியில் இரு நாட்டு எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களும் சந்திக்கும் பகுதியாக உள்ளது.

ஒவ்வொரு தினமும் மாலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பஞ்சாப் மாநிலம் அட்டாரி - வாகா எல்லையில் இந்தியா, பாகிஸ்தான் நாட்டு தேசியக் கொடிகளை இறக்கும் நிகழ்வினை காணவும், வீரர்களின் சிறப்பான அணிவகுப்பைக் காணவும், இரு நாட்டு மக்களும் ஆர்வமுடன் கூடுவார்கள். 

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது ஏற்பட்ட சண்டையைத் தொடர்ந்து அட்டாரி - வாகா எல்லை மூடப்பட்டது.

மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் இன்று அட்டாரி - வாகா எல்லையில் நாட்டின் சுதந்திர நாளையொட்டி, இந்திய ராணுவ வீரர்கள் மிடுக்குடன் வீறுநடை போட்டு தேசிய கொடியை இறக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.

இந்திய வீரர்களின் மிடுக்கான அணிவகுப்பை பொதுமக்கள் உற்சாகமாக கண்டு ரசித்து ஆரவாரம் செய்ததுடன், ராணுவத்தினரை உற்சாகப்படுத்தும் விதமாக “வந்தே மாதரம்..” என தேசபக்தி முழக்கங்களுடன் கரகோஷம் எழுப்பி மகிழ்ச்சி அடைந்தனர்.

எல்லைப் பாதுகாப்புப் படையினர், இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்து அங்கு குழுமியிருந்தவர்களை உற்சாகமடைய வைத்தனர்.

கலை நிகழ்ச்சிகளை தொடர்ந்து நாட்டின் முப்படையை சேர்ந்த வீரர்களின் சிறப்பு அணிவகுப்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை காண அரசு உயர் அதிகாரிகளுடன், பொதுமக்களும் பெருமளவில் வருகை தந்தனர். இதனை கண்டுகளித்த பொது மக்கள் வீரர்களுக்கு கைதட்டி உற்சாகமூட்டினர்.

Beating Retreat ceremony underway at Attari-Wagah Border

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைசன் புதிய பாடல் அப்டேட்!

டிசம்பர் முதல் வாரத்தில் இந்தியா வருகிறார் விளாதிமீர் புதின்!

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்...!

நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்து! 26 பேர் பலி

சுதந்திரப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் சிறை சென்றார்களா? மோடி விளக்கம்

SCROLL FOR NEXT