ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள ஜோத் காட்டி என்ற கிராமத்தில் இன்று(ஆக. 17) அதிகாலை மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 4 பேர் பலியாகினர் மற்றும் 6 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
ஒரே இரவில் பெய்த கனமழையால், அந்தக் கிராமத்திற்குச் செல்லும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டப் பகுதிக்கு செல்ல தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு, உள்ளூர் தன்னார்வலர்களின் உதவியுடன் காவல்துறை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் ஆகியோரின் கூட்டு முயற்சியால், சம்பவ இடத்திற்கு சென்று மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
இதுவரை 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், காயமடைந்த 6 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாவட்ட நிர்வாகம் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது, மேலும் மக்கள் விழிப்புடன் இருக்கவும், நீர்நிலைகளுக்கு அருகில் செல்வதைத் தவிர்க்கவும் வலியுறுத்தியுள்ளது.
முன்னதாக, ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள சோசிடி கிராமத்தில் கடந்த வியாழக்கிழமை ஏற்பட்ட மேகவெடிப்பைத் தொடர்ந்து, வெள்ளத்தில் சிக்கி மாயமான 82 பேரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த இயற்கை பேரழிவால் இதுவரை 60 பேர் உயிரிழந்ததுடன் 100-க்கும் மேற்பட்டோா் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: அயர்லாந்தில் இந்தியர்கள் மீது தொடரும் இனவெறித் தாக்குதல்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.