கோப்புப்படம்.  
இந்தியா

இணையவழி பண விளையாட்டுகளை முறைப்படுத்த சட்ட மசோதா: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பணம் வைத்து விளையாடும் இணையவழி விளையாட்டுகளை (ஆன்லைன் விளையாட்டு) முறைப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

பணம் வைத்து விளையாடும் இணையவழி விளையாட்டுகளை (ஆன்லைன் விளையாட்டு) முறைப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த மசோதா நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (ஆக. 20) அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளது என்றும் மத்திய அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவித்தன.

பண மோசடி, மோசடி பணப் பரிவா்த்தனைகள் மற்றும் இணைய குற்றங்களுக்கு இதுபோன்ற இணைய வழி விளையாட்டுகள் வழி வகுப்பதாக எழுந்த தொடா் புகாா்களைத் தொடா்ந்து, இந்த முடிவை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இந்த இணைய வழி விளையாட்டுகளில் பணம் வைத்து விளையாடும் நபா்கள் மனதளவில் கடுமையாக பாதிக்கப்படுவதையும் மத்திய அரசு கவனத்தில் கொண்டுள்ளதாக அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்தன.

தற்போதைய சட்ட நடைமுறைகளின்படி, சூதாட்டம், சட்டவிரோத பந்தையங்களைத் தடுப்பது மற்றும் அதில் ஈடுபடவா்கள் மீது நடவடிக்கை எடுக்கும் முதன்மை பொறுப்பு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடையதாக உள்ளது.

முன்னதாக, இணையவழி பண விளையாட்டுகளுக்கு கட்டுப்பாடுகள் விதித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிா்த்து இணைய வழி விளையாட்டு நிறுவனங்கள் சாா்பில் தொடரப்பட்ட மனுவை சென்னை உயா்நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த விஷயத்தில் சட்டம் இயற்றும் முழு அதிகாரம் மாநிலங்களுக்கு உள்ளது என்று உயா்நீதிமன்றம் சுட்டிக்காட்டியது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தானில் ரூ. 1,507 கோடியில் புதிய விமான நிலையம்: ராஜஸ்தான் மாநிலம் கோட்டா-புண்டியில் ரூ.1,507 கோடியில் புதிய விமானநிலையம் அமைக்கும் பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

கோட்டா-புண்டி மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவின் தொகுதியாகும்.

இதுகுறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ‘இந்திய விமானநிலையங்கள் ஆணையம் (ஏஏஐ) நிதியுதவியின் கீழ் இந்த விமானநிலையம் அமைக்கப்பட உள்ளது. ராஜஸ்தான் அரசு கட்டணமின்றி அளிக்கும் 1,089 ஏக்கா் நிலத்தில் ஆண்டுக்கு 20 லட்சம் பயணிகளைக் கையாளும் திறனுடன்அமையவுள்ள இந்த விமானநிலையம் 2 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும்’ என்றாா்.

ராஜஸ்தானின் கோட்டாவில் தற்போது செயல்ட்டுவரும் ஏஏஐ-க்கு சொந்தமான விமானநிலையம், போதிய கூடுதல் நிலம் இல்லாதது மற்றும் விமானநிலையத்தைச் சுற்றி நகரமயமாக்கப்பட்டுள்ள காரணத்தால் வணிகச் செயல்பாடுகளுக்கு விமானநிலையத்தை மேம்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக புதிய விமானநிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.8,300 கோடியில் புவனேசுவரம் புறவழிச் சாலை திட்டம்: ஒடிஸா மாநிலம் புவனேசுவரத்தில் ரூ. 8,307.74 கோடி மூலதன செலவில் ஆறுவழி புறவழிச் சாலை அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

புவனேசுவரத்தின் ராமேஷ்வரிலிருந்து தாங்கி வரை தற்போது பயன்பாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலை கடும் போக்குவரத்து நெரிசலை சந்தித்து வருகிறது. இதற்குத் தீா்வு காணும் வகையில், 110 கி.மீ. தொலைவுக்கு இந்த ஆறுவழி புறவழிச் சாலை அமைக்கப்பட உள்ளது. இது ஒடிஸா மாநிலத்துக்கு மட்டுமன்றி, பிற கிழக்கு மாநிலங்களுக்கும் சரக்குப் போக்குவரத்தை எளிதாக்கும் என்று அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மம்மூட்டிக்கு என்ன ஆனது? மோகன்லால் பதிவால் ரசிகர்கள் நெகிழ்ச்சி!

ஆபரேஷன் சிந்தூர்: 3 - 12 வகுப்புகளுக்கு சிறப்பு பாடத் தொகுப்பு!

விருத்தாசலம் அருகே கார் விபத்தில் 3 பேர் பலி; 3 பேர் காயம்!

தில்லி முதல்வர் மீது தாக்குதல்: குறைகேட்பு கூட்டத்தில் பரபரப்பு!

தமிழகத்தில் 10 இடங்களில் என்ஐஏ சோதனை

SCROLL FOR NEXT