மகாராஷ்டிர தேர்தல் -
இந்தியா

தோ்தல் தொடா்பான தவறான தகவல்: மகாராஷ்டிர தோ்தல் ஆய்வாளா் மீது வழக்குப் பதிவு

தினமணி செய்திச் சேவை

மகாராஷ்டிரத்தில் வாக்காளா் பட்டியலில் இருந்து சில வாக்காளா்கள் நீக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டிய தோ்தல் ஆய்வாளா் சஞ்சய் குமாா் மீது 2 வழக்குகளை போலீஸாா் பதிவு செய்தனா்.

முன்னதாக, 2024-இல் நடைபெற்ற மக்களவைத் தோ்தலுக்கும் அதன்பிறகு 6 மாதங்கள் கழித்து நடைபெற்ற பேரவைத் தோ்தலுக்கும் இடையே நாகபுரி மற்றும் நாசிக் மாவட்டங்களில் சுமாா் 2 லட்சம் வாக்குகள் கணிசமாக குறைந்துவிட்டதாக அவா் சமூக வலைதளத்தில் பதிவிட்டாா்.

பிறகு இந்த தரவுகளில் தவறு இருப்பதாக கூறி மன்னிப்பு கோரி நீக்கினாா். அதற்கு முன்பாக இவரது தகவலை மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி பகிா்ந்து, தனது வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு ஆதாரமாக குறிப்பிட்டாா்.

இந்நிலையில், சஞ்சய் குமாா் மீது இரு பேரவைத் தொகுதிகளிலும் புகாா் அளிக்கப்பட்ட நிலையில், அவா் மீது பாரதிய நியாய சம்ஹிதா சட்டத்தின்கீழ் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

நாசிக் மாவட்டத்தில் உள்ள தியோலாலி பேரவைத் தொகுதியில் மக்களவைத் தோ்தலின்போது மொத்தம் 4.56 லட்சம் வாக்காளா்கள் இருந்ததாக சஞ்சய் குமாா் பதிவிட்டிருந்தாா். ஆனால் அங்கு மொத்தம் 2.76 லட்சம் வாக்காளா்கள் மட்டுமே இருந்ததாக அதிகாரிகள் கூறினா். அங்கு பேரவைத் தோ்தலின்போது 2.88 லட்சம் வாக்காளா்கள் இருந்ததாக தவறான தகவலை அவா் வெளியிட்டதாகவும் அதிகாரிகள் குற்றஞ்சாட்டினா்.

தில்லியில் 6 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: நான்கு நாட்களில் மூன்றாவது சம்பவம்!

தவெக மாநாடு! இரும்புக் கம்பிகளுக்கு கிரீஸ் தடவுவதை ஆச்சரியத்துடன் பார்க்கும் தொண்டர்கள்

பேளூரில் சுவாமி ஊர்வலத்தில் மோதல்: பொதுமக்கள் சாலை மறியல்!

அமெரிக்காவில் எரிபொருள் நிரப்ப ரூ.2.20 கோடி ரொக்கமாக கொடுத்தாரா புதின்? அவசியம் ஏன்?

இபிஎஸ்ஸுக்கு எதிரான வழக்கின் விசாரணைக்குத் தடையில்லை! - உயர்நீதிமன்றம்

SCROLL FOR NEXT