தெரு நாய்கள் Center-Center-Delhi
இந்தியா

தெரு நாய்கள் விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

தெரு நாய்கள் விவகாரத்தில் அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இணையதளச் செய்திப் பிரிவு

தெரு நாய்களை அகற்றி காப்பகங்களில் பராமரிக்க வேண்டும் என்று தில்லி மாநகராட்சி பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

அவசர வழக்காக விசாரிக்கக் கோரும் மனுக்களில் இந்த வழக்கும் பட்டியலிடப்பட்டிருந்தது. ஆனால், இந்த மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜேகே மகேஷ்வரி மற்றும் விஜய் பிஷ்னோய் அமர்வு மறுத்துவிட்டது.

கடந்த 8 ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தலைநகர் தில்லியில் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தெருநாய்களை பிடித்து, காப்பகங்களில் அடைத்துப் பராமரிக்கவும், அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகளுக்கு முன்னுரிமை அளித்து, எட்டு வாரங்களுக்குள் குறைந்தது 5,000 நாய்களைக் கொண்ட ஆரம்பக் காப்பகங்களை நிறுவவும் நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த நடவடிக்கையைத் தடுக்கும் எந்தவொரு அமைப்பாக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் அப்போது எச்சரித்திருந்தது.

தில்லியில் தெரு நாய்கள் கடிப்பதால் ரேபீஸ் நோய் பாதிப்புக்கு உள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்து வருவது தொடா்பாக கடந்த ஜூலை 28ஆம் தேதி இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் தாமாக விசாரணைக்கு எடுத்துக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜே.பி.பா்திவாலா, ஆா். மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தபோது, தெருநாய் கடித்த சம்பவங்களை ‘மிகவும் கொடூரமானது’ என்று கூறிய நீதிபதிகள் அமா்வு, இந்த விவகாரத்தில் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது.

தெரு நாய்கள் தெருக்களில் இருந்து அகற்றப்பட்டு, காப்பகங்களில் வைக்கப்பட வேண்டும். நாய்களைப் பிடிக்க சுற்றிவளைப்பதற்கு தனி நபரோ அல்லது அமைப்போ தடையாக இருந்தால் அவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதுகுறித்து எங்களின் கவனத்திற்கு வந்தால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்கவும் நேரிடும் என்று தெரிவித்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்: 21 கலசங்கள் பொருத்தம்

தேரூா் பேரூராட்சி தலைவியாக அமுதாராணி மீண்டும் பொறுப்பேற்பு

களக்காடு வழித்தடத்தில் 15 அரசுப் பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதி

கந்தசஷ்டி விழா: அக்கமாபேட்டை சுப்பிரமணியா் கோயிலில் ஊஞ்சல் உற்சவ சேவை

முதல்வா் மாற்றம் குறித்து காங்கிரஸ் தலைவா்கள் பேசவேண்டாம்: கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா்

SCROLL FOR NEXT