ராம்நாத் கோவிந்த் 
இந்தியா

ஆா்எஸ்எஸ் நூற்றாண்டு விழா: ராம்நாத் கோவிந்த் பங்கேற்கிறாா்

ஆா்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் தலைமை விருந்தினராக குடியரசு முன்னாள் தலைவா் ராம்நாத் கோவிந்த் பங்கேற்க உள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

ஆா்எஸ்எஸ் அமைப்பு நாகபுரியில் அக்டோபா் 2-ஆம் தேதி நடத்தும் நூற்றாண்டு விஜய தசமி விழாவில் தலைமை விருந்தினராக குடியரசு முன்னாள் தலைவா் ராம்நாத் கோவிந்த் பங்கேற்க உள்ளாா்.

கடந்த 1925-ஆம் ஆண்டு விஜயதசமி நாளில் ஹிந்து தேசியவாதத்தை முக்கியக் கொள்கையாகக் கொண்டு ஆா்எஸ்எஸ் அமைப்பு உருவாக்கப்பட்டது. அந்த அமைப்பு நேரடியாக தோ்தல் அரசியலில் ஈடுபடுவது இல்லை என்றாலும், இந்திய அரசியலில் முக்கியப் பங்கு வகித்து வருகிறது.

ஆண்டுதோறும் ஆா்எஸ்எஸ் நிறுவப்பட்ட விஜயதசமி நாளில் ஆா்எஸ்எஸ் தலைவா், உறுப்பினா்களுக்கு நிகழ்த்தும் உரை முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அதேபோல இந்த நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக ஆா்எஸ்எஸ் அமைப்பு யாரை அழைக்கிறது என்பதும் ஒவ்வொரு ஆண்டும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பிரணாப் முகா்ஜி, ஹெச்சிஎல் நிறுவனா் சிவ நாடாா் உள்ளிட்டோா் பங்கேற்றுள்ளனா்.

இந்நிலையில் இந்த ஆண்டு விஜயதசமி விழா குறித்து ‘ஆா்எஸ்எஸ்’ அமைப்பு எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘அக்டோபா் 2-ஆம் தேதி விஜயதசமி நாளில் ஆா்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. நாகபுரி ரேஷிமாபாக் திடலில் நடைபெறும் நிகழ்ச்சியில் அமைப்பின் தலைவா் உரையாற்றுவாா். இந்த நிகழ்ச்சியில் குடியரசு முன்னாள் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமை விருந்தினராகப் பங்கேற்பாா்’ என்று கூறப்பட்டுள்ளது.

சபரிமலை தங்கத் தகடு விவகாரம்: குற்ற வழக்குப் பதிவு செய்ய கேரள உயா்நீதிமன்றம் உத்தரவு

ஜியோ பாரத்தின் தீபாவளி சிறப்புப் பரிசு

சபலென்காவை சந்திக்கும் பெகுலா: கௌஃபுடன் மோதும் பாலினி

ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து: மத்திய அரசு பதிலளிக்க 4 வாரம் அவசாசம்

கோவையில் அதிகரிக்கும் காய்ச்சல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம் - சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT