இந்தியா

உள்நாட்டில் தயாரான பல அடுக்கு வான் பாதுகாப்பு அமைப்பு சோதனை வெற்றி!

ஒடிசாவில் ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்பின் முதல் விமான சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

ஒடிசாவில் ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்பின் முதல் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (ஆக. 24) அறிவித்துள்ளார்.

ஒடிசா கடற்கரையில் சனிக்கிழமை பிற்பகல் இந்தச் சோதனை நடத்தப்பட்டதாகவும், எதிரிகளின் பல்வேறு வான்வழி அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (டிஆர்டிஓ) முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட பல அடுக்கு அமைப்பு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட பல்வேறு ஏவுகணைகள், வான் பாதுகாப்பு ரேடார், லாஞ்சர்கள், வழிகாட்டு சாதனங்கள் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகள் உள்ளிட்டவற்றை பல அடுக்குகளில் உள்ளடக்கியதே ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்பாகும். இந்த வான் பாதுகாப்பு அமைப்பின் முதல் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளது.

இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ராஜ்நாத் சிங் பதிவிட்டுள்ளதாவது,

''2023 ஆகஸ்ட் 23ஆம் தேதி, தேசிய ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு அமைப்பானது (டிஆர்டிஓ) முதல்முறை நிகழ்த்தப்பட்ட, ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்பின் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது.

தேசிய ஆராய்ச்சி மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்பின் வெற்றிக்கு காரணமாக இந்தியாவின் ஆயுதப் படை மற்றும் ராணுவ தொழில் துறைக்கும் வாழ்த்துகள்.

நமது நாட்டின் பல அடுக்கு வான் பாதுகாப்பு அமைப்பை இந்த தனித்துவமான சோதனை வலுவாக நிறுவியுள்ளது. எதிரிகளின் வான்வழித் தாக்குதல் அச்சுறுத்தல்களுக்கு எதிராக நமது பாதுகாப்புத் துறையில் பலம் வாய்ந்த ஒன்றாக இது இருக்கும்'' எனவும் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க | ஸ்பைடர்மேன் உடையணிந்து பைக் சாகசம்! ரூ.15,000 அபராதம் விதித்த காவல் துறை!

India adds more power to its defence capabilities, DRDO successfully test fires Integrated Air Defence Weapon System

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசியலமைப்பு சட்டமே ஆபத்தில் சிக்கியுள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

“உன்னைப்போல் பிறரை நேசி!” -மதராஸி டிரைலர் இதோ!

டயர் உற்பத்தி 7-8 சதவிகிதம் வரை உயரும்!

வரதட்சிணைக்காக மனைவி எரித்தே கொலை: “இதெல்லாம் சாதாரண விஷயம்” -கணவன் பதில்!

ஃபிளமிங்கோ பூவே... க்ரித்தி ஷெட்டி!

SCROLL FOR NEXT