ஜம்மு - காஷ்மீரின் தலைநகர் ஸ்ரீநகரில், தில்லியில் இருந்து சென்ற ஸ்பைஸ் ஜெட் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி, இன்று (ஆக.29) 4 குழந்தைகள் மற்றும் 7 பணியாளர்கள் உள்பட 205 பயணிகளுடன் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்று சென்றுக் கொண்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, மாலை 3.27 மணியளவில் அந்த விமானம் அழுத்த பிரச்னையின் காரணமாக ஸ்ரீநகர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர், அந்த விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்ட நிலையில், விமானம் முழுவதும் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து, வெளியான அறிக்கையில், பயணிகள் மற்றும் பணியாளர்கள் யாருக்கும் எந்தவொரு ஆபத்தும் ஏற்படவில்லை எனவும், யாரும் மருத்துவ உதவிகளைக் கோரவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: உ.பி.யில் இருசக்கர வாகனத்தில் இருந்து பணத்தை தூக்கிச்சென்ற குரங்கு !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.