வைஷ்ணவி தேவி கோயில் நுழைவுப் பகுதி -
இந்தியா

ஜம்மு - காஷ்மீரைப் புரட்டிப்போடும் பேரிடர்! 10 பேர் பலி?

ஜம்மு-காஷ்மீரைப் புரட்டிப்போடும் மேக வெடிப்பிலும், நிலச்சரிவிலும் சிக்கி 10 பேர் பலி

இணையதளச் செய்திப் பிரிவு

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் மேக வெடிப்பு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இன்று 10 பேர் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜம்மு - காஷ்மீர், ரீஸி மாவட்டம் மஹோர் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில், ஒரு வீடு அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அதிலிருந்து ஏழு பேர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

மஹோர் பகுதியில் பட்டார் கிராமத்தில் கனமழை பெய்ததால் கடும் நிலச்சரிவு ஏறப்ட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வீட்டில், நசிர் அகமது, அவரது மனைவி மற்றும் ஐந்து மகன்களுடன் இருந்ததாகவும், அவர்கள் அனைவரும் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ராம்பன் மாவட்டத்தில் ராஜ்கட் பகுதியில், சனிக்கிழமை அதிகாலையில் மேக வெடிப்பு காரணமாக பயங்கர மழை பெய்து, வெள்ளம் ஏற்பட்டதாகவும், இதில் 3 பேர் அடித்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சம்பவ இடங்களில் மீட்புப் படையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வளா்ச்சிக்கு வித்திடும் பயிற்சி!

மாற்றத்தைப் பாா்வையில் தொடங்குவோம்!

பண்டிகைக் காலம்: 2 மாதங்களில் 69 சிறப்பு ரயில்கள் 374 முறை இயக்கம்

போக்குவரத்து பணியாளா்களுக்கு ரூ.6.15 கோடி சாதனை ஊக்கத் தொகை

உங்க கனவ சொல்லுங்க திட்டம்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT