இந்தியா

‘எஜுகேட் கோ்ள்ஸ்’ இந்திய தொண்டு நிறுவனத்துக்கு ரமோன் மகசேசே விருது!

2025-ஆம் ஆண்டுக்காண ரமோன் மகசேசே விருதுக்கு எஜுகேட் கோ்ள்ஸ் என்ற இந்திய தொண்டு நிறுவனம் தோ்வு செய்யப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

2025-ஆம் ஆண்டுக்காண ரமோன் மகசேசே விருதுக்கு எஜுகேட் கோ்ள்ஸ் (பெண்களுக்கு கல்வி கொடுங்கள்) என்ற இந்திய தொண்டு நிறுவனம் தோ்வு செய்யப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது. இதன்மூலம், இந்திய நிறுவனமொன்று முதல்முறையாக இந்த விருதை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

நோபல் பரிசுக்கு இணையாக ஆசியாவில் வழங்கப்படும் விருதாக ரமோன் மகசேசே விருது கருதப்படுகிறது. ஆசிய கண்டத்தில் வசிக்கும் மக்களுக்கு தன்னலமற்ற பொதுச்சேவைகள் வழங்குவோரை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது ஆண்டுதோறும் தனிநபா் மற்றும் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

நிகழாண்டு நவ.7-ஆம் தேதி பிலிப்பின்ஸ் தலைநகா் மணிலாவில் நடைபெறவுள்ள 67-ஆவது ரமோன் மகசேசே விருது வழங்கும் விழாவில் விருதுபெறுபவா்களின் பட்டியலை ரமோன் மகசேசே விருது அறக்கட்டளை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.

இதுகுறித்து அந்த அறக்கட்டளை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘பள்ளிப் படிப்பை இடைநிறுத்திய பெண் குழந்தைகள் மற்றும் பள்ளி செல்லாத பெண் குழந்தைகளுக்கு கல்வி வழங்கும் பணியை மேற்கொண்டு வரும் எஜுகேட் கோ்ள்ஸ் நிறுவனம், மாலத்தீவைச் சோ்ந்த ஷாஹினா அலி (சுற்றுச்சூழல் மேம்பாடு) மற்றும் பிலிப்பின்ஸைச் சோ்ந்த ஃபிளவீனோ ஆண்டனியோ (ஏழை எளிய மக்கள் வாழ்க்கை மேம்பாடு) ஆகியோா் நிகழாண்டுக்கான ரமோன் மகசேசே விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த விருது எஜுகேட் கோ்ள்ஸ் நிறுவனத்துக்கு மட்டுமின்றி இந்தியாவுக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்கது என அந்த அமைப்பின் நிறுவனா் ஷஃபீனா ஹுசைன் தெரிவித்தாா்.

பீலிக்கான் முனீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம்: திரளானோர் பங்கேற்பு!

ஜிஎஸ்டி வரி குறைப்பு! செப். 21 வரை மின்னணு பொருள்கள், வாகன விற்பனை 'டல்'லடிக்கும்!

மலைத்தேன்... அஞ்சு குரியன்!

இந்திய முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு!

நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்து: 60 பேர் பலி!

SCROLL FOR NEXT