கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாரின் இல்லத்திற்கு காலை உணவு விருந்திற்காக முதல்வர் சித்தராமையா நாளை(டிசம்பர் 2) செல்லவுள்ளார்.
இது இரு தரப்பினருக்கிடையேயான கருத்து மோதலை தற்காலிகமாக நிறுத்துவதற்கான முயற்சியாகக் பார்க்கப்படுகிறது. மேலும், டிசம்பர் 8 ஆம் தேதி சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கவுள்ள நிலையில் சித்தராமையா முதல்வராக தொடர்ந்து நீடிப்பார் என்பதையும் இது காட்டுகிறது.
முதல்வா் பதவி தொடா்பாக சித்தராமையாவுக்கும், டி.கே.சிவகுமாருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்துவந்தது. இந்த அரசியல் மோதல், ஜாதி மோதலாகவும் உருவெடுத்தது. இதனால் காங்கிரஸ் மேலிடம் இந்த விவகாரத்தில் தலையிட்டு, இருவரும் சந்தித்து பேசி இந்த விவகாரத்தில் சமரசம் செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தியது.
இந்த நிலையில், சித்தராமையா தனது பெங்களூரில் உள்ள காவிரி இல்லத்துக்கு துணை முதல்வா் டி.கே.சிவகுமாரை சனிக்கிழமை அழைத்து காலை உணவு விருந்தளித்தாா். அப்போது, இருவரும் 30 நிமிடங்கள் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதன்பிறகு இருவரும் கூட்டாக செய்தியாளா்களைச் சந்தித்தனா்.
அப்போது, காங்கிரஸ் மேலிட வழிகாட்டுதலின்படி சுணக்கம் இல்லாமல் இருவரும் ஒன்றிணைந்து உழைப்போம் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.