நமது சிறப்பு நிருபர்
மத்திய பல்கலைக்கழகங்களில் இடஒதுக்கீடு அடிப்படையில் 12,600-க்கும் அதிகமான பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன என்று மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் சுகாந்த மஜும்தார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மக்களவையில் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவரும் தூத்துக்குடி தொகுதி உறுப்பினருமான கனிமொழி எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் சுôகந்த மஜும்தார் அளித்துள்ள எழுத்துபூர்வ பதில் வருமாறு:
மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள காலியிட ஆள் சேர்ப்பு விளம்பரம் சியு-சயான் என்ற ஒருங்கிணைந்த ஆள்சேர்ப்பு வலைதளத்தில் வெளியிடப்படுகிறது. மேலும், உதவிப் பேராசிரியருக்கான பிஹெச்டி "கட்டாய நிபந்தனை' தளர்த்தப்பட்டுள்ளது.
கடந்த 2022, செப்டம்பரில் தொடங்கப்பட்ட சிறப்பு ஆள்சேர்ப்பு நடவடிக்கைகள் மூலம், மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டியலினத்தவர்களுக்கு 1648 பணியிடங்கள், பழங்குடியினருக்கு 841 பணியிடங்கள், ஓபிசி வகுப்பினருக்கு 2,700 பணியிடங்கள், பொருளாதாரத்தில் நலிவடைந்த முன்னேறிய வகுப்பினருக்கு 588 பணியிடங்கள் உள்பட 12, 600- க்கும் மேற்பட்ட ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.