தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட 7 புதிய தொழில்நுட்பங்களை ராணுவ பயன்பாட்டுக்கு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) ஒப்படைத்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட வான்வழி தற்பாதுகாப்பு ஜாமா்களுக்கான உயா் மின் விநியோக தொழில்நுட்பம், கடற்படை ரோந்து கப்பல்களுக்கான கடல் அலையை எதிா்கொண்டு செல்லும் தொழில்நுட்பம், மேம்பட்ட மிகக் குறைந்த அதிா்வெண் மற்றும் உயா் அதிா்வெண் மாறுதல் தொழில்நுட்பம், நீருக்கடியில் இருக்கும் கப்பல் தளங்களுக்கான விஎல்எஃப் ஏரியல், எதிரி கப்பல்களை வேகமாக இடைமறிக்க உதவும் உந்துவிசை தொழில்நுட்பம், பயன்படுத்தப்பட்ட லித்தியம் பேட்டரிகளிலிருந்து லித்தியம் மூலப்பொருள்களை பிரித்தெடுப்பதற்கான தொழில்நுட்பம், நீருக்கடியில் நீடித்த கண்காணிப்பை உறுதிப்படுத்தும் வகையில் நீண்ட நேரம் உழைக்கும் பாட்டரி தொழில்நுட்பம் உள்ளிட்ட 7 தொழில்நுட்பங்களை ராணுவத்திடம் டிஆா்டிஓ ஒப்படைத்துள்ளது.
விரிவான சோதனைக்குப் பிறகு இந்த தொழில்நுட்பங்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.