விபத்தில் காயமடைந்த நபருக்கு சிகிச்சையளிப்பதில் அலட்சியம் காட்டிய மருத்துவர்கள் மீது எஃப்ஐஆர் பதியப்பட்டுள்ளது. மகாராஷ்டிரத்தின் பட்லாபூர் நகரில் கடந்த மாதம் 28-இல் மோட்டார் சைக்கிளில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் காயமடைந்து சிகிச்சைக்காக அப்பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்ட நபருக்கு முறையான சிகிச்சையளிக்கப்படாததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதன் காரணமாக அந்த நபர் உயிரிழந்தார் என்றும் சொல்லப்படுகிறது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தினர் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் போலீஸார் அந்த மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் 3 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை(டிச. 9) தெரிவித்தனர். மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.