மூத்த குடிமக்களுக்கான ரயில் டிக்கெட் சலுகை மீண்டும் வருமா? என்ற கேள்விக்கு, வளர்ந்த நாடுகளைக் காட்டிலும், இந்தியாவில் ரயில் கட்டணம் குறைவு என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியிருக்கிறார்.
நமது அண்டை நாடுகளைக் காட்டிலும், ஏன் வளர்ந்த நாடுகளைக் காட்டிலும் கூட, இந்தியாவில்தான் ரயில் டிக்கெட் விலை குறைவாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
மக்களவையில் இன்று காங்கிரஸ் எம்.பி. எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் இவ்வாறு கூறினார்.
கரோனா பேரிடர் காலத்துக்கு முன்பு இந்திய ரயில்வேயில் வழங்கப்பட்டு வந்த, முதியவர்களுக்கான ரயில் டிக்கெட் கட்டணச் சலுகை உள்ளிட்ட அரசின் திட்டங்கள் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படுமா என்று மக்களவையில் இன்று காங்கிரஸ் எம்.பி. விஷ்ணு பிரசாத் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அஸ்வினி வைஷ்ணவ், வளர்ந்த நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் ரயில் டிக்கெட் மிகவும் குறைவு, அதாவது, அந்த நாடுகளின் ரயில் டிக்கெட் விலையில் வெறும் 5 அல்லது 20 சதவிகிதம்தான் இந்தியாவில் ரயில் டிக்கெட் விலை.
அது மட்டுமல்ல, அண்டை நாடுகளுடன் ஒப்பிட்டாலும், மிகவும் குறைவான கட்டணத்தில்தான் டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன. அண்டை நாடுகளை விட, நமது நாட்டில், குடிமக்களுக்கும், பயணிகளுக்கும் மிகவும் குறைந்த கட்டணத்தில் போக்குவரத்து வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்று பதிலளித்துள்ளார்.
இதன் மூலம், மூத்த குடிமக்களுக்கான ரயில் டிக்கெட் சலுகை மீண்டும் வழங்கப்படாது என்றே கூறப்படுகிறது.
இதையும் படிக்க.. பயணிகளால் துன்புறுத்தலுக்கு ஆளாகும் இண்டிகோ ஊழியர்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.