மகாராஷ்டிர சட்ட மேலவை உறுப்பினர்(எம்எல்சி) பதவியை காங்கிரஸ் தலைவர் பிரக்ஞா சதவ் ராஜிநாமா செய்தார்
காங்கிரஸ் தலைவர் பிரக்ஞா சதவ்யின் பதவிக்காலம் 2030-ல் முடிவடையவிருந்தது.
காங்கிரஸ் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் நெருங்கிய நம்பிக்கைக்குரியவருமான மறைந்த ராஜீவ் சதவின் மனைவியான பிரக்ஞா சதவ் எம்எல்சி பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
சட்ட மேலவைத் தலைவர் ராம் ஷிண்டேவிடம் பேசிய பிறகு, பிரக்ஞா சதவ் வியாழக்கிழமை காலை தனது ராஜிநாமா கடிதத்தை சட்டமன்றச் செயலகத்தில் சமர்ப்பித்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.
உள்ளாட்சித் தேர்தல்களுக்கு மத்தியில் பிரக்ஞாவின் இந்த விலகல் காங்கிரஸுக்கு ஒரு பின்னடைவாகக் கருதப்படுகிறது.
பிரக்ஞா சதவ் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: சாதனையை முறியடித்த லயன்: நாற்காலியைத் தூக்கி வீசிய மெக்ராத்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.